பெரிய திருமொழி.114
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1061
பாசுரம்
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. 2.2.4
Summary
For the sake of the beautiful Nappinnai of thin ball-clasping flingers. He battled against seven bulls. He is the Lord who was brought up as the world famous Nandagopala’s son. He is out Lord; he reclines in Evvul.
பெரிய திருமொழி.115
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1062
பாசுரம்
பால நாகி ஞாலமேழு
முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும்
தாமரைக் கண்ணன்எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும்
நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி
லெவ்வுள் கிடந்தானே. 2.2.5
Summary
The Lord with matchless lotus-eyes lay sleeping as a child on a fig leaf during the deluge, with the seven worlds in his stomach. Amid cool groves with lakes abounding in lotuses from which dark bumble-bees slip nectar, the Lord reclines in Evvul.
பெரிய திருமொழி.116
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1063
பாசுரம்
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்fபி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2.6
Summary
The dear Lord whom devotees throng and incessantly call, “our Lord”, is the lotus-eyed lord, who is also the elder Lord of the celestials, the lord worshipped by the three-eyed Lord and the four-faced lord. He reclines in Evvul.
பெரிய திருமொழி.117
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1064
பாசுரம்
திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ் கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. 2.2.7
Summary
The four faced Brahma who bears the sky, Air, Water, Fire and the Moon worships the Vedic Lord as his father. The lord Siva with mat-hair-Ganga on his head, who wears a nectar-dripping Konrai garland,-also worships our Lord’s feet. He reclines in Evvul.
பெரிய திருமொழி.118
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1065
பாசுரம்
முனிவன் மூர்த்தி மூவராகி
வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல்
புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன்
ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான்
எவ்வுள் கிடந்தானே. 2.2.8
Summary
The first-cause Lord who himself became the three,-Brahma, Siva and Indra,- who expounded the truth of the Vedas, who has a Kaya hue and wears the sacred Tulasi crown, who is the Lord of the celestials, and who is Lord afar and inaccessible to all, is yet the lord sweet and close to his devotees. He reclines in Evvul.
பெரிய திருமொழி.119
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1066
பாசுரம்
பந்தி ருக்கும் மெல்விரலாள்
பாவை பனிமலராள்,
வந்தி ருக்கும் மார்வன்நீல
மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர்
நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா
னெவ்வுள் கிடந்தானே. 2.2.9
Summary
The cool eyed thin-fingered ball clasping lotus-dame Lakshmi resides forever in the chest of the blue gem Lord. Indra the lord of the celestials far above, comes and offers worship. He is our Lord, he reclines in Evvul.
பெரிய திருமொழி.120
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1067
பாசுரம்
இண்டை கொண்டு தொண்டரேத்த
எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில்
மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய்
மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே
லாள்வ ரருலகே. (2) 2.2.10
Summary
The Lord reclines in Evvul, Worshipped by devotees with garlands, kaliyan, the king of the Mangai-tract with bee-humming groves, has sung this garland of cool Tamil songs. Those who master it will rule not only the Earth but also the world of the eternals, this is certain.
பெரிய திருமொழி.121
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1068
பாசுரம்
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த
சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு
பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.1
Summary
The great bow’s sacrifice, the mighty Kamsa, the wrestler, the rutted elephant and the mahout, were all destroyed by out lord who rid the three city-destroyer Siva of his curse. He came as the charioteer for Arjuna and destroyed the Kaurava foes; he gave up his kingdom on orders from his step-mother Kaikeyi. I have seen him in Tiruvallikkeni.
பெரிய திருமொழி.122
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1069
பாசுரம்
வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை
விழுமிய முனிவர்கள் விழுங்கும்,
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத் தோர்தொழு தேத்தும்,
ஆதியை யமுதை யென்னை யாளுடை
அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.2
Summary
The Lord of the Vedas, the purpose of Vedic sacrifice, the perfectly sweet fruit enjoyed by the seers, the elephant of Nandagopala, the first-cause worshipped by earthlings, my Lord and Master, resides in Mayilai with women of matchless beauty. I have seen Him in Tiruvallikkeni.
பெரிய திருமொழி.123
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1070
பாசுரம்
வஞ்சனை செய்யத் தாயுரு வாகி
வந்தபே யலறிமண் சேர,
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட
நாதனைத் தானவர் கூற்றை,
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து
துதிசெய்யப் பெண்ணுரு வாகி,
அஞ்சுவை யமுத மன்றளித் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.3
Summary
With evil intentions, the ogress came disguised as a mother, but fell to the ground writhing in pain when the Lord sucked her poison breast and her life with it. He is like death unto Asuras; he is worshipped by Siddhas, Charanas and Vidyadharas. He came in the form of a beautiful dame and gave ambrosia to the gods. I have seen him in Tiruvallikkeni.