திருவாய்மொழி.941
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3731
பாசுரம்
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க,
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,
வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,
சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 9.6.4
Summary
The Lord who contains all the worlds is contained in them. I cannot understand how the Tirukkatkaai Lord fancied such a lowly soul as mine!
திருவாய்மொழி.942
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3732
பாசுரம்
திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து,
உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்,
திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கருவளர் மேனிஎன் கண்ணங்கள் வங்களே. 9.6.5
Summary
Pretending to shower grace he entered into me, and in a trice he swallowed me, body and soul. Oh, the tricks of dark hued Lord Krishna plays! He lives in fertile groves of Tirukkatkarai
திருவாய்மொழி.943
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3733
பாசுரம்
எங்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும்,
அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது,
புங்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல்,
எங்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே. 9.6.6
Summary
My Krishna’s tricks appear to me as truths. This chaff of my soul which he sucked and threw aside wakes up to reality, then weeps day and night, “My Krishna, my Krishna” and worships him at Tirukkatkarai
திருவாய்மொழி.944
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3734
பாசுரம்
காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும்,
வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும்,
ஆட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால்,
கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே. 9.6.7
Summary
Worshipping my Krishna at Tirukkatkarai, my love-sickness grows; I think and then weep. He came and took me lovingly into his service. But my soul diminishes day by day, alas!
திருவாய்மொழி.945
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3735
பாசுரம்
கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான்,
நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்,
காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பற்கு,
ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே. 9.6.8
Summary
He came not to take my service, but to eat my soul! Day by day, bit by bit, he eats my all. My rain cloud Lord at Tirukkatkarai, -was he interested in service? His attention was on my soul!
திருவாய்மொழி.946
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3736
பாசுரம்
ஆருயிர் பட்ட தெனதுயிர் பட்டது,
பேரிதழ் தாமரைக் கண்கனி வாயதோர்,
காரெழில் மேகத்தென் காட்கரை கோயில்கொள்,
சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே. 9.6.9
Summary
My dark hued Lord at Tirukkatkarai has lotus eyes and coral lips, four arms and a godly radiance. Which other soul does he torture like he does mine?
திருவாய்மொழி.947
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3737
பாசுரம்
வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்
பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. 9.6.10
Summary
I thought, “If ever I see him I will gobble him”, but before I could, he deceived me and hastily drank my all. My dark Lord of Tirukkatkarai is smart!
திருவாய்மொழி.948
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3738
பாசுரம்
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை,
கொடிமதிள் தெங்குரு கூர்ச்சட கோபஞ்சொல்,
வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்
முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே. (2) 9.6.11
Summary
This decad of the thousand songs by Satakopan of lvy-walled kurugur on the Lord who killed kamsa will destroy the mirage of the world, just see!
திருவாய்மொழி.949
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3739
பாசுரம்
எங்கானல் அகங்கழிவாய்
இரைத்தேர்ந்திங் கினிதமரும்,
செங்கால மடநாராய்.
திருமூழிக் களத்துறையும்,
கொங்கார்பூந் துழாய்முடியெங்
குடக்கூத்தர்க் கென்fதூதாய்,
நுங்கால்க ளென் தலைமேல்
கெழுமீரோ நுமரோடே. (2) 9.7.1
Summary
O Good egret searching for worm in my garden mire! Go to Tirumulikkalam as my messenger, to my pot-dancer Lord who wears the fragrant Tulasi; then you and all your kin may place your feet on my head
திருவாய்மொழி.950
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3740
பாசுரம்
நுமரோடும் பிரியாதே
நீரும்நும் சேவலுமாய்,
அமர்காதல் குருகினங்காள்.
அணிமூழிக் களத்துறையும்,
எமராலும் பழிப்புண்டிங்
கென்?தம்மால் இழிப்புண்டு,
தமரோடங் குறைவார்க்குத்
தக்கிலமே. கேளீரே. 9.7.2
Summary
O Lovebird herons flocking with your mates and kin! I am spurned by him and scorned by me kin. What use living? Go ask my Lord who lives in Tirumulikkalam with his retinue; are we not fit for his company?