ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.9
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3921
பாசுரம்
கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்
வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே? 29
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.10
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3922
பாசுரம்
இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.11
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3923
பாசுரம்
ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.
ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. (2) 31
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.12
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3924
பாசுரம்
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.13
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3925
பாசுரம்
அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.14
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3926
பாசுரம்
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.15
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3927
பாசுரம்
நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.16
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3928
பாசுரம்
அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.17
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3929
பாசுரம்
படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.18
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3930
பாசுரம்
ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே
போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்
வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம்
நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38