திருமங்கை_ஆழ்வார்
பெரிய திருமொழி.1041
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1988
பாசுரம்
இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம்
என்ன இனமாய மான்பின் எழில்சேர்
அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப
தற்கொ ருருவாய மானை யாமையா,
கொலைமலி யெய்து வித்த கொடியோன்
இலங்கை பொடியாக வென்றி யமருள்,
சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த
நங்கள் திருமால் நமக்கொ ரரணே. 11.4.7.
Summary
The wicked Ravana came to the forest hut when the beautiful sharp-eyed Sita was alone, and abducted her. Our Lord Tirumai singled out the wonder-deer from the heart and killed it. He then rained fire-spitting arrows over the Rakshasa;s Lanka hount and routed the city. That Avatara is our protector and king.
பெரிய திருமொழி.1042
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1989
பாசுரம்
முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி
யுண்ண முதலோடு வீடு மறியாது,
என்னிது வந்த தென்ன இமையோர்
திகைப்ப எழில்வேத மின்றி மறைய,
பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும்
நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ,
அன்னம தாயி ருந்தங் கற_ல்
உரைத்த அதுநம்மை யாளு மரசே. 11.4.8.
Summary
Long ago lwhen the worlds were engulfed in darkness, the celestials, not knowing the origin or the end, despaired and asked, “What has happened to us?”. Even the Vedas disappeared in answer to the prayers of gods and sages, the Lord came as a swan and divulged the sacred texts, lifting the darkness of the world and pleasing all. That Avatara is our protector and king.
பெரிய திருமொழி.1043
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1990
பாசுரம்
துணைநிலை மற்றெ மக்கொ ருளதென்
றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உணமுலை முங்கொடு த்த வுரவோள
தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி,
பணமுலை யாயர் மாத ருரலோடு
கட்ட அதனோடு மோடி அடல்சேர்,
இணைமரு திற்று வீழ நடைகற்ற
தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே. 11.4.9.
Summary
Devotees! Worship the Lord as the sole refuge. Long ago when an ogress came to kill Krishna, the child sucked her poison breast and her life too with it. He stole butter and Dame Yasoda bound him to a mortar. He toddled with the mortar trailing behind him, entered between two cloely-growing Marudu trees, and broke them, In how many ways the Lord rids us of our Karmas!
பெரிய திருமொழி.1044
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1991
பாசுரம்
கொலைகெழு செம்மு கத்த களிறொன்று
கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த
நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்
கலிகெழு மாட வீதி வயல்மங்கை
மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்,
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற
தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே. 11.4.10
தரவு கொச்சக் கலிப்பா
Summary
This garland of sweet tamil sangs! by well-laid out Mangai city;s king, Kalikanri sings of our Lord Tirumal who killed the deathly rutted elephant, and who entered the wicked king;s Lanka and burnt it to ashes with his flery arrows. Devotees who go about singing these songs will rule the world of celestials.
பெரிய திருமொழி.1045
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1992
பாசுரம்
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே (2) 11.5.1
Summary
“Aho, Sister! Your hero took the rocky forest path with his fawn-eyed Vaidehi, and lived in the wilderness, see!” “Yes, but the golden feet that trad the rocky forest path become the flowers that the celestials wore on their heads, so tally!”
பெரிய திருமொழி.1046
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1993
பாசுரம்
தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ,
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே 11.5.2
Summary
“Aho, Sister! The One who was born to loosen the shackles on his father;s feet had to grow up as the redeemer-son of Nanda;s clan in Alppadi, See!
பெரிய திருமொழி.1047
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1994
பாசுரம்
ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே 11.5.3
Summary
“Aho, Sister! With the whole world heaping slander, the Alappadi son ate the curds kept by braided-hair dames, See!”.
பெரிய திருமொழி.1048
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1995
பாசுரம்
அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,
எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே 11.5.4
Summary
“Aho, Sister Going to Aippadi, he became a cow-grazer amid innocent folk, and enjoyed himself eating butter from the rope-shelf by stealth, see!”.
பெரிய திருமொழி.1049
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1996
பாசுரம்
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.5
Summary
Aho, sister! That dark-coiffured cowherd dame bound him up with a short spinous rope and beat him for stealing buter, see!”.
பெரிய திருமொழி.1050
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1997
பாசுரம்
கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப,
மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ,
மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும்,
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.6
Summary
“Aho, Sister! With drums beating like wild, he danced on stilts in the crossroads, entertaining passers-by See!”.