Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமடல்.86

பாசுர எண்: 2758

பாசுரம்
முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்தறிவி ரில்லையே? - மல்விடையின்
துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்       46

பெரிய திருமடல்.87

பாசுர எண்: 2759

பாசுரம்
தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,
கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,
என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த       47

பெரிய திருமடல்.88

பாசுர எண்: 2760

பாசுரம்
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின்
சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல்
அன்ன கடலை மலையிட் டணைகட்டி,       48

பெரிய திருமடல்.89

பாசுர எண்: 2761

பாசுரம்
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண்
மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்,       49

பெரிய திருமடல்.90

பாசுர எண்: 2762

பாசுரம்
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,
கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து,       50

பெரிய திருமடல்.91

பாசுர எண்: 2763

பாசுரம்
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,
மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,       51

பெரிய திருமடல்.92

பாசுர எண்: 2764

பாசுரம்
பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,
கொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை,
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்       52

பெரிய திருமடல்.93

பாசுர எண்: 2765

பாசுரம்
தன்னின் உடனே சுழ்ல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை, மற் றன்றியும்,
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,      53

பெரிய திருமடல்.94

பாசுர எண்: 2766

பாசுரம்
மன்னும் குறளுருவில் மாணியாய், - மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,      54

பெரிய திருமடல்.95

பாசுர எண்: 2767

பாசுரம்
மன்னா. தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த
பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து, அங்      55

Enter a number between 1 and 4000.