Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமொழி.761

பாசுர எண்: 1708

பாசுரம்
வியமுடை விடையினம் உடைதர மடமகள்,
குயமிடை தடவரை யகலம துடையவர்,
நயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,
கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே. (2) 8.7.1

Summary

The Lord who destroyed seven bulls and embraced the mountain-like breasts of the cowhered-dame Nappinnai resides in kannapuram where swans in lakes learn the art of graceful gait from young dames.

பெரிய திருமொழி.762

பாசுர எண்: 1709

பாசுரம்
இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து
துணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,
மணமலி விழவினொ டடியவர் அளவிய,
கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.2

Summary

The Lord who uprooted the twin Marudu trees and fought seven bulls for the joy of union with corsetted Nappinnai resides in kannapuram which is teaming with love killed devotees during auspicious festival days.

பெரிய திருமொழி.763

பாசுர எண்: 1710

பாசுரம்
புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,
மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,
முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,
கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.3

Summary

The Lord who lifted a mountain and protected the swooning cows against a hailstorm resides in kannapuram amid hills where the harvesters sickle brings out rabbits from their burrows and fertile fields where kayal-fish dance enchanted.

பெரிய திருமொழி.764

பாசுர எண்: 1711

பாசுரம்
ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய்
போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்மகள்
காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.4

Summary

The perfect, pure Lord who was abused and laughed at for stealing butter resides in kannapuram where the lady of the bee-humming lotus resides lovingly with him.

பெரிய திருமொழி.765

பாசுர எண்: 1712

பாசுரம்
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து
விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ
கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.5

Summary

The Lord who waged a war and razed the fortressed city of Lanka, and who measured the Earth and sky in two strides resides in kannapuram where devotees, celestials and bands flock for worship and elevation of spirit.

பெரிய திருமொழி.766

பாசுர எண்: 1713

பாசுரம்
மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,
தழுவிய உருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்
எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.6

Summary

The Lord who wieled an ae and has a cloud hue resides permanantly with the lady Sri in kannapuram where lotus blossoms everywhere are thronged by bees that sing in beautiful panns.

பெரிய திருமொழி.767

பாசுர எண்: 1714

பாசுரம்
பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம்
எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறைசொலு மடியவர்
கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.7

Summary

The Lord who is the maker and monitor of the sun, the Moon, the Mountains, the Quarters, the earth and fire, resides in kannapuram where devotees throng to chant and rcite the Vedas and upanishads properly.

பெரிய திருமொழி.768

பாசுர எண்: 1715

பாசுரம்
படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு
கொடிபுல்கு தடவரை அகலம துடையவர்
முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்
கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.8

Summary

The Lord who measured the Earth with his feet and who bears the lotus-dame Lakshmi on his mountain-like-chest resides in kannapuram where ploughed fertile fields made ready for transplantation carry the fragrance of lotus blossoms.

பெரிய திருமொழி.769

பாசுர எண்: 1716

பாசுரம்
புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய
நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்
வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை
கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.9

Summary

The Lord of gem-hue who wields a discus in Prayoga-mudra and stands with the lotus-dame Lakshmi and Earth Dame standing by him on eitherside, resides in kannapuram where boats carrying riches crowd the shore at all times.

பெரிய திருமொழி.770

பாசுர எண்: 1717

பாசுரம்
மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை
வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய இசையினொடு
ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே. (2) 8.7.10

Summary

These Tamil songs by kaliyan, king of stone-walls-and-fertile-fields-surrounded Mangai fract, extol the celebrated Lord of kannapuram. Devotees who consing it funefully will have no karmic sin.

Enter a number between 1 and 4000.