திருமழிசையாழ்வார்
நான்முகன் திருவந்தாதி.81
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2462
பாசுரம்
கதவு மனமென்றும் காணலா மென்றும்,
குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து. 81
Summary
O Lord! My heart was a follow land. You sowed the seeds of good Tamil and cultivated it, bringing forth a rich harvest of knowledge, No more shall my heart Vacillate between bondage and freedom.
நான்முகன் திருவந்தாதி.82
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2463
பாசுரம்
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே?, - அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து. 82
நான்முகன் திருவந்தாதி.83
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2464
பாசுரம்
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர். 83
Summary
The adorable discus-wielder lord graces those who seek him by delivering to each, his own heart’s desires. His cool grace comes through kings, gods, people, friends, mother and several others. In all of whom, it is his hidden hand that gives.
நான்முகன் திருவந்தாதி.84
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2465
பாசுரம்
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில். 84
Summary
My hean is not tickle; I shall appose Siva, he is no match tome. My heart’s love is given solely to worshipping everyday the feet of my king and Lord Sri Krishna, who wears resounding Victory anklets.
நான்முகன் திருவந்தாதி.85
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2466
பாசுரம்
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன். 85
Summary
The bow-wielder Lord who pierced an arrow into the mighty angry Vall’s chest is forever in my heart, Praising the ancient Lord is my vacation, it is also a Good avocation for me!
நான்முகன் திருவந்தாதி.86
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2467
பாசுரம்
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை. 86
Summary
See, O Heart! The supreme Lord exists. Always he exists. In the hearts of devotees, he exists, The Lord without a peer appears before devotees like me on his own know it.
நான்முகன் திருவந்தாதி.87
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2468
பாசுரம்
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர். 87
Summary
The Lord ate up the mountain-like heap of food-offering meant for Indra, then protected the cows with a mount. Who else can do this? He is the maker afreligious texts, and their protector too. He swallowed Siva, Brahma and all the worlds.
நான்முகன் திருவந்தாதி.88
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2469
பாசுரம்
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது. 88
Summary
When life departs from the body, the lord rushes to ensure the safety of his souls. Sing his names, Ending Karmas, contemplating him. Those who live thus, alone live. Others who are tied to small returns do not live at all.
நான்முகன் திருவந்தாதி.89
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2470
பாசுரம்
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89
Summary
I have learnt an undying truth, Those who worship the feet of devotees who firmly worship the feet of the Milk-ocean-Lord everyday, will be rid of their strongest Karmas, and have the doors of Vaikunta thrown open to them.
நான்முகன் திருவந்தாதி.90
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2471
பாசுரம்
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர் 90
Summary
Those who wall to rule Vaikunta worship constantly the Venkatam lord offering flowers with clear mind, and cultivate love for all, humbling themselves before his devotees, who thus get the exalted life themselves.