Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.571

பாசுர எண்: 3361

பாசுரம்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே? 6.2.8

Summary

O Lord of radiant knowledge and countless glories, making all things so different, yet like one! when friends call and I go, you stop and dry us. Alas, what will the unfriendly ones not say?

திருவாய்மொழி.572

பாசுர எண்: 3362

பாசுரம்
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
      உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு
      சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே. 6.2.9

Summary

To melt our heart with love and trap us in your lotus-snare, you trod on the sand-castles we made and took the food we had laid out, you did not merely stand and watch, with you radiant smile.  Alas!  We are not fortunate.

திருவாய்மொழி.573

பாசுர எண்: 3363

பாசுரம்
நின்றிலங்கு முடியினாய். இருபத் தோர் கால்
      அரசு களை கட்ட,
வென்றி நீண்மழுவா. வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத்
      தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே. 6.2.10

Summary

O Lord of radiant crown, wielder of the axe that destroyed Kings! O Lord who made the Universe, O Lord of radiant hue!  Today you have come and uplifted the cowherd-clan.  Alas we cowherd-girls are pained!

திருவாய்மொழி.574

பாசுர எண்: 3364

பாசுரம்
ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய்
      வார்த்தையுள், சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,
ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு
      மோர்பத் திசையோடும்,
நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே. 6.2.11

Summary

This decad of the thousand songs sung with music by kurugur satakopan on the Lord who stole butter and was punished by the cowherd-mother, -those who mater it will be freed of poverty.

திருவாய்மொழி.575

பாசுர எண்: 3365

பாசுரம்
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே. 6.3.1

Summary

I see the Lord everywhere; he appears in many ways, as poverty and plenty, as heaven and hell, as bitter feud and friendship, a poison and medicine.  He is my master living with affluent people in Tiru-vinnagar.

திருவாய்மொழி.576

பாசுர எண்: 3366

பாசுரம்
கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே. 6.3.2

Summary

As pleasure and pain, as confusion and clear thought, as punishment and forgiveness, as light and shade, -the Lord my master is hard to understand, He resides in Tiru-vinnagar, surrounded by clear waters.

திருவாய்மொழி.577

பாசுர எண்: 3367

பாசுரம்
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்,
நிகரில்சூழ் சுடராயிரு ளாய்நில னாய்விசும்பாய்,
சிகரமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
புகர்கொள் கீர்த்தியல்லாலில்லை யாவர்க்கும் புண்ணியமே. 6.3.3

Summary

As cities and villages, as knowledge and ignorance, as the brilliant orbs and darkness, as Earth and the wide sky. –the Lord resides in Tiru-vinnagar, surrounded by mansions. Other than his grace, we have no refuge.

திருவாய்மொழி.578

பாசுர எண்: 3368

பாசுரம்
புண்ணியம் பாவம்
      புணர்ச்சிபிரி வென்றிவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய்
      இன்மயாயல்லனாய்,
திண்ணமா டங்கள்சூழ்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
கண்ணனின் னருளேகண்டு
      கொண்மின்கள் கைதவமே. 6.3.4

Summary

As good and bad Karmas, as union and separation, as memory and amnesia, as reality and illusinon, — he is these and he is not. Krishna, the Lord of Thiru-vinnagar, is surrounded by mansions. Other than him there is no doer, witness ye all!

திருவாய்மொழி.579

பாசுர எண்: 3369

பாசுரம்
கைதவம் செம்மை
      கருமை வெளுமையுமாய்,
மெய்பொய் யிளமை
      முதுமைபுதுமை பழமையுமாய்,
செய்யதிண் மதிள்சூழ்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பெய்தகாவு கண்டீர்
      பெருந்தேவுடை மூவுலகே. 6.3.5

Summary

The doer is the colours fair and red, black and white, truth and falsehood, youth and age, the new and the old. The Lord is in Tiru-vinnagar, fortified by walls.  See, he laid out this garden-world and all the good in it.

திருவாய்மொழி.580

பாசுர எண்: 3370

பாசுரம்
மூவுலகங் களுமாய்
      அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த்
      தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,
தேவர்மே வித்தெழும்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே
      யுறைகின்ற பரஞ்சுடரே. 6.3.6

Summary

As these three worlds and no them, as peace and anger, as the lotus-dame, and the wretched-dame, as praise and terrible blams, -the Lord of Tiru-vinnagar is worshipped by the gods. He is a radiant lotus-form that lives in my heart.

Enter a number between 1 and 4000.