திருவாய்மொழி
திருவாய்மொழி.591
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3381
பாசுரம்
இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில்
ஏறுகள் செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும்
உட்பட மற்றும்பல,
அகல்கொள் வையம் அளந்த மாயனென்
அப்பன்றன் மாயங்களே,
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன
மனப்ப ரிப்பே? 6.4.6
Summary
Ripping the beak of the Baka-bird, killing the seven bulls, destroying the tall kurundu trees, -night and day I am blest to sing these and other wonders that my Lord performed, when he came and strode the wide Earth. I have no despair.
திருவாய்மொழி.592
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3382
பாசுரம்
மனப்பரி போட ழுக்கு மானிட
சாதியில் தான்பிறந்து,
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன
சீற்றத்தினை முடிக்கும்,
புனத்து ழாய்முடி மாலை மார்பனென்
அப்பன்தன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி
யார்நிகர் நீணிலத்தே? 6.4.7
Summary
Out of compassion he took birth in this filthy world of mortals. Taking the forms he chose to, he gave vent to his anger. My Lord and father wears a crown of Tulasi flowers. My Heart remembers him in wonder; who in the world can equal me?
திருவாய்மொழி.593
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3383
பாசுரம்
நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும்
போர்கள் செய்து,
வாண னாயிரம் தோள்து ணித்ததும்
உட்பட மற்றும்பல,
மாணி யாய்நிலம் கொண்ட மாயனென்
அப்பன்றன் மாயங்களே,
காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென
கலக்க முண்டே? 6.4.8
Summary
The Earth and sky were wonder-struck to witness the great war. He then cut as under the thousand arms of the mighty Bana. He came as a manikin and took the Earth, by walking three good steps. My heart can see them all; now what can trouble me?
திருவாய்மொழி.594
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3384
பாசுரம்
கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே
ழும்கழி யக்கடாய்,
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும்
உட்பட மற்றும்பல,
வலக்கை யாழி யிடக்கை சங்கம்
இவையுடை மால்வண்ணனை,
மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம்
மண்ணின் மிசையே? 6.4.9
Summary
The wonder of his crossing the seven turbid oceans and the seven fall mountains, driving over the end of the seven worlds, these and many other acts of the Lord of discus-conch, -whoever speaks to me about these, can be he my enemy?
திருவாய்மொழி.595
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3385
பாசுரம்
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத
மாபெ ரும்போர்,
பண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப்
பாழ்பட நூற்றிட்டுப்போய்,
விண்மி சைத்தன தாம மேபுக
மேவிய சோதிதன்தாள்,
நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக்
கார்பிறர் நாயகரே? 6.4.10
Summary
To rid the burden of the world, he waged a mighty war, and showed his wonder-form, routing and killing armies. He then left and entered his own dear resort in the sky. Through worshipping his feet alone, I have found a master without a peer.
திருவாய்மொழி.596
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3386
பாசுரம்
நாய கன்முழு வேழுல குக்குமாய்
முழுவே ழுலகும்,தன்
வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய்
அவையல் லனுமாம்,
கேசவன் அடியிணை மிசைக்குரு கூர்ச்சட
கோபன் சொன்ன
தூய வாயிரத் திப்பத்தால்
பத்தராவர் துவளின்றியே. 6.4.11
Summary
This decad of the thousand song by kurugur Satakopan on the feet of Kesava, Lord of the seven worlds, who lifted them and strode them, became them and not them, -those who can sing and dance to it will become blameless devotees.
திருவாய்மொழி.597
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3387
பாசுரம்
துவளில் மாமணி மாட மோங்கு
தொலைவில் லிமங்க லம்தொழும்
இவளை, நீரினி யன்னை மீர்.உமக்
காசை யில்லை விடுமினோ,
தவள வொண்சங்கு சக்க ரமென்றும்
தாம ரைத்தடங் கணென்றும்,
குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க
நின்று நின்று குமுறுமே. 6.5.1
Summary
O Ladies, pry leave the girl alone, you have no love anymore. Her dark lotus eyes brim with tears, haltingly she murmurs. “Beautiful conch and discus”. Large lotus eyes” and “spotless jewel mansions rise in Tulavili-Mangalani”.
திருவாய்மொழி.598
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3388
பாசுரம்
குமுறு மோசை விழவொ லித்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
அமுத மென்மொழி யாளை நீருமக்
காசை யின்றி அகற்றினீர்,
திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள்
தேவ தேவபி ரானென்றே,
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க
நெக்கொ சிந்து கரையுமே. 6.5.2
Summary
You took this sweet and soft-spoken girl to Tulaivilli-Mangalam,-gay with festival sounds, -then abandoned her without a heart, she lies like one possessed, her lips form “Devadevapiran’, her eyes well with tears, she falls and then melts, alas!
திருவாய்மொழி.599
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3389
பாசுரம்
கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
உரைகொ ளின்மொழி யாளை நீருமக்
காசை யின்றி அகற்றினீர்,
திரைகொள் பௌவத்து சேர்ந்த தும்திசை
ஞாலம் தாவி யளந்ததும்,
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி
நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே. 6.5.3
Summary
You took this sweetly chirping girl to Tulavilli-Mangalam, filled with cool green bowers, then left her heartlessly. She now stands with tear-filled eyes and only mutters incoherently about grazing cows, measuring the Earth and reclining on waters.
திருவாய்மொழி.600
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3390
பாசுரம்
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை
வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந்
தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல்
வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து
உள்மகிழ்ந்து குழையுமே. 6.5.4
Summary
See, after going to Tulaivilli-Mangalam, -where Vedic seers throng, -she has lost her self-control and become possessed, “Dark hued Lord”, she keeps on calling, -with rising joy, -then pleased beyond measure, she falls into a swoon.