Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.601

பாசுர எண்: 3391

பாசுரம்
குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை
      வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட்f
      பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு
      அன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும்
      அத்தி சையுற்று நோக்கியே. 6.5.5

Summary

O Ladies, you took this soft radiant girl to Tulaivilli-Mangalam and showed her the Lord of lotus eyes and jewel-stealing radiance. From then on, she is in this mood, lost in thought.  She looks in that direction and bows, with tears falling like rain.

திருவாய்மொழி.602

பாசுர எண்: 3392

பாசுரம்
நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு
      செந்நெ லோங்குசெந் தாமரை,
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
      வந்தொ லைவில்லி மங்கலம்,
நோக்கு மேல்அ த் திசையல் லால்மறு
      நோக்கி லள்வைகல் நாள்டொறும்,
வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன்
      நாம மேயிவள் அன்னைமீர். 6.5.6

Summary

The wealthy Tulaivilli-Mangalam lies on the Northern banks of cool porunal, where sugarcane, paddy and lotus grow fall all around.  Since that fateful day, this girl locks that-a-ways night and day and only multers the names of the gem-hued Lord.

திருவாய்மொழி.603

பாசுர எண்: 3393

பாசுரம்
அன்னை மீர்.அணி மாம யில்சிறு
      மானி வள்நம்மைக் கைவலிந்து,
என்ன வார்த்தையும் கேட்கு றாள்தொலை
      வில்லி மங்கலம் என்றல்லால்,
முன்னம் நோற்ற விதிகொ லோமுகில்
      வண்ணன் மாயங்கொ லோ,அவன்
சின்ன மும்திரு நாம முமிவள்
      வாய னகள்தி ருந்தவே. 6.5.7

Summary

O Ladies, this peacock-fair fawn has slipped out of your hands.  She cannot hear anything save “Tulaivilli-Mangalam”.  His symbols and his names alone are on her lips, unfailingly. Alas!  Is this the fruit of her past karmas, or the Maya-tricks of the Lord?

திருவாய்மொழி.604

பாசுர எண்: 3394

பாசுரம்
திருந்து வேதமும் வேள்வி யும்திரு
      மாம களிரும் தாம்,மலிந்,
திருந்து வாழ்பொரு நல்வ டகரை
      வண்தொ லைவில்லி மங்கலம்,
கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅ ந்
      நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,
இருந்தி ருந்து தர விந்த லோசன.
      என்றேன் றேநைந்தி ரங்குமே. 6.5.8

Summary

The Lord lives in plenty on the Northern banks on Porunal, in prosperous Tulaivilli-Mangalam, amid Vedic chanters and Lakshmi-like ladies.  Since the day this dark-eyed fawn worshipped him there, everyday she says “Aravindalochana” patiently, then falls and weeps.

திருவாய்மொழி.605

பாசுர எண்: 3395

பாசுரம்
இரங்கி நாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள்
      கண்ண நீர்கள் அலமர,
மரங்க ளுமிரங் குவ கை மணி
      வண்ண வோ. என்று கூவுமால்,
துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை
      வில்லி மங்கல மென்று,தன்
கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு
      நாமங் கற்றதற் பின்னையே. 6.5.9

Summary

Ever since this girl learnt the town’s name.  She weeps and speaks disjointedly. “O, Manivanna!” She calls, with a cry that would melt a tree. “The Lord who ripped the horse’s jaws lives inTulavilli-Mangalam”, she says, then joins her hands in silent prayer.

திருவாய்மொழி.606

பாசுர எண்: 3396

பாசுரம்
பின்னை கொல்நில மாம கள்கொல்?
      திரும கள்கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு
      மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை
      யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அ வ் வூர்த்திரு
      நாமம் கேட்பது சிந்தையே. 6.5.10

Summary

What a miraculous birth she has taken! She calls “O Lord! you came to live permanently, standing and sitting inTulaivilli-Mangalam”. She bows her head and only yearns to hear the name of that town. Is she Nappinnai, or Bhu-devi or Lakshmi? I wonder!

திருவாய்மொழி.607

பாசுர எண்: 3397

பாசுரம்
சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும்
      தேவ பிரானையே,
தந்தை தாயென் றடைந்த வண்குரு
      கூர வர்சட கோபன்சொல்,
முந்தை யாயிரத் துள்ளி வைதொலை
      வில்லி மங்கலத் தைச்சொன்ன,
செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை
      செய் வார்திரு மாலுக்கே. 6.5.11

Summary

This decad of Tamil songs on the Lord of Tulaivilli-Mangalam, from the pure thousand by kurugur Satakopan, who attained the Lord a his father and mother in thought, word and deed, will secure a life of service to the Lord, for those can who sing it.

திருவாய்மொழி.608

பாசுர எண்: 3398

பாசுரம்
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்
ஏலக் குழலி யிழந்தது சங்கே. 6.6.1

Summary

My fair coiffured daughter has lost her bangles, -to the groom of beautiful red lotus eyes, who came as a manikin and measured the Earth the Lord of dark cloud hue.

திருவாய்மொழி.609

பாசுர எண்: 3399

பாசுரம்
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,
செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்
மங்கை யிழந்தது மாமை நிறமே. 6.6.2

Summary

My beautiful daughter has lost the pink in her cheeks, -to the conch-bow-dagger-mace-discus wielder, Lord of red lotus eyes and coral lips, who wears honey-dripping Tulasi flowers on his crown.

திருவாய்மொழி.610

பாசுர எண்: 3400

பாசுரம்
நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,
திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே. 6.6.3

Summary

My well-coiffured daughter has lost her grace, -to the dark-hued Lord, the trickster who swallowed the worlds with his small mouth, to the one who bears a spinning discus in hand.

Enter a number between 1 and 4000.