Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.631

பாசுர எண்: 3421

பாசுரம்
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு
மெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்.விரைந் தோடிவந்தே? 6.8.2

Summary

O My parrots, before Vel-eyed damsels I swear, I will give you sweet butter-filled pudding with my hands, Pray seek my discus-bearing lord of berry lips.  Tell him of my love and come back to me quickly.

திருவாய்மொழி.632

பாசுர எண்: 3422

பாசுரம்
ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ,
கூடிய வண்டினங்காள். குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான்,
சூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே? 6.8.3

Summary

O Gregarious bees, go drink the nectar from the Tulasi flowers worn by the Lord, -he steered the chariot for the Pandavas against the great army in war, -come back quickly and blow his fragrance over my coiffure flowers.

திருவாய்மொழி.633

பாசுர எண்: 3423

பாசுரம்
தூமது வாய்கள்கொண்டு
      வந்தென்முல்லைகள் மேல்தும்பிகாள்,
பூமது வுண்ணச்செல்லில்
      வினையேனைப் பொய்செய்தகன்ற,
மாமது வார்தண்டுழாய்
      முடிவானவர் கோனைக்கண்டு,
யாமிது வோதக்கவா
      றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே. 6.8.4

Summary

O Bumble-bees! Take note, if you wish to sip the nectar from my Mullai flowers, go seek the Lord who played false and deserted me.  He wears the fragrant Tulasi on his crown, Tell him, this is no way to treat a lover.

திருவாய்மொழி.634

பாசுர எண்: 3424

பாசுரம்
நுங்கட்கி யானுரைக்கேன்
      வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து
      வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச்
      செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண்
      டிதுவோதக்க வாறென்மினே. 6.8.5

Summary

O Parrots, I brought you up; now let me teach you something. The Lord came riding on his Garuda and stole my wicked heart.  He has red eyes and lips, a dark hue and rises like a Kalipa trees. Go seek him wherever he is, then say to him, “This is the proper way”.

திருவாய்மொழி.635

பாசுர எண்: 3425

பாசுரம்
என்மின்னு நூல்மார்வ
      னென்கரும்பெரு மானென்கண்ணன்,
தன்மன்னு நீள்கழல்மேல்
      தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,
கன்மின்க ளென்றும்மையான்
      கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,
சென்மின்கள் தீவினையேன்
      வளர்த்தசிறு பூவைகளே. 6.8.6

Summary

O Little mynahs, this wicked self brought you up. My radiant-chested dark Lord Krishna will not deny you the Tulasi on his radiant lotus feet. Go to him and speak the worlds I taught, repeating them all the way.

திருவாய்மொழி.636

பாசுர எண்: 3426

பாசுரம்
பூவைகள் போல்நிறத்தன்
      புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய்
      நின்றமாயனென் ஆழிபிரான்,
மாவைவல் வாய்பிளந்த
      மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள். தீர்க்கிற்றிரே
      வினையாட்டியேன் பாசறவே. 6.8.7

Summary

O My pet dolls!  Would you not go to Madusudana,-who ripped the horse’s jaws, -deliver my message, and end my sorry plight?  My Lord is dark like the Prvai flower, he has eyes like lotus petals, he is the discus-Lord who stands as everyone and everything.

திருவாய்மொழி.637

பாசுர எண்: 3427

பாசுரம்
பாசற வெய்தியின்னே
      வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக்
      குருகே.அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர்
      முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால்
      மறுநோக்கிலள் பேர்த்துமற்றே. 6.8.8

Summary

O Perfect-winged white egret, pray help me! How many ages must I suffer thus, bereft of my love? Go see the heedless Lord of spotless hue and radiant crown, and say, “This maiden sees no one save you”.

திருவாய்மொழி.638

பாசுர எண்: 3428

பாசுரம்
பேர்த்துமற் றோர்களைகண்
      வினையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி
      யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல்
      கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி
      யுரையீர்வைகல் வந்திருந்தே. 6.8.9

Summary

O Flock of geese searching for worms in the water! Hapless me, other than him, I have no protector, Go see the monsoon-cloud Krishna, Lord of celestials, Come back to me and repeat his words incessantly.

திருவாய்மொழி.639

பாசுர எண்: 3429

பாசுரம்
வந்திருந் தும்முடைய
      மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி
      யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை
      யின்னாவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி
      யுரையீர்வைகல் மறுமாற்றங்களே. 6.8.10

Summary

O Beautiful swans, nestling amid lotus flowers in the water, -you, your bright spouses and all your kin, -go see my Lakshmi-chested Lord in his chambers and tell him, “This maiden is this and this”, then come back and tell me what he says.

திருவாய்மொழி.640

பாசுர எண்: 3430

பாசுரம்
மாற்றங்க ளாய்ந்துகொண்டு
      மதுசூதபி ரானடிமேல்,
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்
      குருகூர்ச்சட கோபன்சொன்ன,
தோற்றங்க ளாயிரத்துள்
      இவையுமொரு பத்தும்வல்லார்,
ஊற்றின்கண் நுண்மணல்போல்
      உருகாநிற்பர் நீராயே. 6.8.11

Summary

This decad of the thousand revelations of fragrant-groved kurugur’s Satakopan on the feet of Madhusudana, with choicest words, will make the heart melt like fine sand in water.

Enter a number between 1 and 4000.