திருவாய்மொழி
திருவாய்மொழி.641
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3431
பாசுரம்
நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 6.9.1
Summary
O Lord, you became the radiant orbs, Siva and Brahma, Earth, Water, Fire, Wind and sky, Will you not come to this wicked self one day, with your conch and discus in hand, and let Heaven and Earth rejoice?
திருவாய்மொழி.642
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3432
பாசுரம்
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,
நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே. 6.9.2
Summary
O wonder-Lord who took the Earth and sky! You came as Vamana, and showed your power on Earth, Pray walk this Earth again one day, Come, let me touch and see you, and dance in joy.
திருவாய்மொழி.643
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3433
பாசுரம்
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,
சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,
கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ? 6.9.3
Summary
O Lord who protects all through every age, we see you walking, standing, sitting and lying. O Lord with beautiful lotus-dame Lakshmi, how many days must I live in seperation?
திருவாய்மொழி.644
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3434
பாசுரம்
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,
விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே. 6.9.4
Summary
You twisted, mangled and destroyed the Asuras, you smote a devil-cart with your foot. At least appear in the sky one day, surrounded by Brahma, Siva, Indra and all the gods.
திருவாய்மொழி.645
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3435
பாசுரம்
விண்மீதிருப்பாய். மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்,
மண்மீதுழல்வாய். இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்,
எண்மீதியன்ற புறவண்டத்தாய். எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ? 6.9.5
Summary
O Lord you sit in the sky, stand on the hill, sleep in the ocean, walk on the plains. You are present in all these, hidden, O Lord existing in countless other worlds as well, Blended in me, will you still hide yourself from me?
திருவாய்மொழி.646
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3436
பாசுரம்
பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,
தீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? 6.9.6
Summary
With one step you strode the Earth and Ocean, With one step you spread and took the worlds above. O Lord, how many days must I yearn to see you? Alas! I melt like wax in fire and roam the Earth.
திருவாய்மொழி.647
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3437
பாசுரம்
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,
உலகுக் கேயோ ருயிரு மானாய் புறவண்டத்து,
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ,
அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே. 6.9.7
Summary
You are the karmic souls roaming the Earth, You are the soul of the world itself. You are the formless ten spheres and the spirit beyond, Pray grace this tiny self of infinite ignorance.
திருவாய்மொழி.648
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3438
பாசுரம்
அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்,
வெறிகொள் சோதி மூர்த்தி. அடியேன் நெடுமாலே,
கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,
பிறிதொன் றறியா அடியே னாவி திகைக்கவே? 6.9.8
Summary
O Soul of the mortals, pray grace this ignorant self. My fragrant icon-Lord of infinite radiance! Will you still keep away and kill me with your tricks? Alas, knowing nothing else. My soul is afflicted!
திருவாய்மொழி.649
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3439
பாசுரம்
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,
பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,
கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ? 6.9.9
Summary
My soul is afflicted by pleasures that the senses heap, would you still destroy me with distractions? Has the time not come for me to be united to your lotus-feet, -that grew and strode the Earth?
திருவாய்மொழி.650
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3440
பாசுரம்
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,
சிறுகா பெருகா அளவி லின்பம் சேர்ந்தாலும்,
மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,
சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே? 6.9.10
Summary
My Lord1 For many endless ages that neither shrink nor stretch, if I were to attain the infinite pleasures of the self, -Alas! On reflection –will that ever match even a short while of service to you without returns?