திருவாய்மொழி
திருவாய்மொழி.681
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3471
பாசுரம்
கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக்
கோநிரை காத்தவன். என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே. என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
என்செய்கேன் என்திரு மகட்கே? 7.2.8
Summary
O Ranga, what can I do for my precious daughter? She says; “O Lord of gods, you lifted a mount to protect the cows!”, she weeps and folds her hands, and sighs hotly as would dry her soul, she says, “O Lord, how can I see you?”, then looks up and stares
திருவாய்மொழி.682
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3472
பாசுரம்
என்திரு மகள்சேர் மார்வனே. என்னும்
என்னுடை யாவியே. என்னும்,
நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
நிலமகள் கேள்வனே. என்னும்,
அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட
ஆய்மகள் அன்பனே. என்னும்,
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே.
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. (2) 7.2.9
Summary
O Ranga in the temple of the South! She says, “My soul!”, “O spouse of Dame Earth, whom you lifted on your tusk!”, “My Lord of lotus-dame Lakshmi, who rests on your chest!”, “Beloved Lord of cowherd-dame, you won her by subduing seven bulls!”, Alas, I cannot decipher her end
திருவாய்மொழி.683
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3473
பாசுரம்
முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும்
மூவுல காளியே. என்னும்,
கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும்
நான்முகக் கடவுளே. என்னும்,
வடிவுடை வானோர் தலைவனே. என்னும்
வண்திரு வரங்கனே. என்னும்,
அடியடை யாதாள் போலிவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. 7.2.10
Summary
She says: “O Lord of the worlds, I know not an end for myself!”, “O Matted-hair konrai-Siva!”, “O Four-faced Brahma!” “O King of the great celestials!”, “O Lord of fragrant Srirangam!” Becoming a refugeless, my daughter has attained the feet of the cloud-hued Lord
திருவாய்மொழி.684
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3474
பாசுரம்
முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ்
வண்குரு கூர்ச்சட கோபன்,
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை
ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
முகில்வண்ண வானத் திமையவர் சூழ
இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. (2) 7.2.11
Summary
This decad of the thousand songs, by Satakopan of Kurugur, through grace attained at the Lord’s feet in groves of Porunal Waters, addresses the good Lord of hue like the raincloud. Those who master it will secure of life of joy, hallowed by good celestials
திருவாய்மொழி.685
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3475
பாசுரம்
வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்
தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,
வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த
வேத வொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத்
திருப்பே ரையில் சேர்வன் நானே. (2) 7.3.1
Summary
O Ladies, how shall I explain this? Alas, you do not see the way my heart sees. My lotus Lord with discus and conch is riding away on his Garuda, he is there is Tirupperyil o joy, where Vedic chants and festival sounds and sounds of Children playing merrily never subside, so thither shall I go
திருவாய்மொழி.686
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3476
பாசுரம்
நானக் கருங்குழல் தோழி மீர்காள்.
அன்னை யர்காள்.அயல் சேரியீர்காள்,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்
என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ்
தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்த துவே. 7.3.2
Summary
O Sakhis of fragrant tresses, O Ladies, O People of the neighbourhood! I cannot stop this galloping heart, it is not in my bridle alas! Night and day it runs after the coral-lipped Lord of celestials, Krishna who sits amid honey-dripping groves in Tiruppereyil surrounded by cool fertile fields
திருவாய்மொழி.687
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3477
பாசுரம்
செங்கனி வாயின் திறத்த தாயும்
செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
சங்கொடு சக்கரம் கண்டு கந்தும்
தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
திங்களும் நாளும் விழாவ றாத
தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ.
நாணும் நிரையு மிழந்த துவே. 7.3.3
Summary
O Friends, my heart has lost its shame and reserve to the Lord who sits in Tiruppereyil, where festivals continue for days and months. How can I forget his fall radiant crown, conch and discus, and the lotus eyes and coral-lips that I have enjoyed so long?
திருவாய்மொழி.688
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3478
பாசுரம்
இழந்தவெம் மாமை திறத்துப் போன
என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,
உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ?
ஓதக் கடலொலி போல எங்கும்,
எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு
தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன்
அன்னையர் காள்.என்னை யென்மு னிந்தே? 7.3.4
Summary
O Ladies, why blame me? Lost in the boom of his wonderful conch, I bade my heart, “Go retrieve my lost lustre from the Lord in Tiruppereyil, where he sits amid Vedic chants that rise like ocean eternally”. Alas! My heart too remained there; now whose help have I for doing what?
திருவாய்மொழி.689
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3479
பாசுரம்
முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த
கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்.
முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,
கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே
காலம் பெறவென்னைக் காட்டு மினே. 7.3.5
Summary
I lost my femininity to my Krishna who smote a devil-cart, drank the ogress breasts, went between dense Marudu trees, and threw a caif against the wood-apple tree, Ladies, come forward, quick! No use blaming me now; show me the way to Tiruppereyil of fruit-laden groves
திருவாய்மொழி.690
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3480
பாசுரம்
காலம் பெறவென்னைக் காட்டு மின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான்
நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த
நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல்திருப் பேரை யிற்கே. 7.3.6
Summary
Save time and take me there, my love swells like the ocean! My cloud-hued Lord appears before me, but is not within my grasp. He sits on Earth in Tirruppereyil amid large water tanks, whisked by fertile ears of paddy with endless Vedic chants