Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.721

பாசுர எண்: 3511

பாசுரம்
எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில்
      மூவுல கும்நீயே,
அங்குயர் முக்கட்fபிரான்
      பிரமன்பெரு மானவன்நீ,
வெங்கதிர் வச்சிரக் கையிந்
      திரன்முத லாத்தெய்வம்நீ,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி
      யென்னுடைக் கோவலனே. 7.6.4

Summary

O My Gopala, wearing a honey-dripping cool Tulasi wreath! You are the three fair worlds.  The three-eyed Siva is you, the Lord Brahma too is you. The thunderbolt-Indra and all the other gods are you.  Where am I to meet you?

திருவாய்மொழி.722

பாசுர எண்: 3512

பாசுரம்
என்னுடைக் கோவல னே.என்
      பொல்லாக்கரு மாணிக்கமே,
உன்னுடை யுந்தி மலருலகம்
      அவைமூன் றும்பரந்து,
உன்னுடைச் சோதிவெள் ளத்தகம்
      பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,
என்னுடை யாருயிரார் எங்ஙனே
      கொல்வந் தெய்துவரே? 7.6.5

Summary

My Gopala, my uncut black-gem Lord!  The three worlds are spread in your lotus-navel.  In the midst of your effulgent radiance, how is this soul to see and attain you?

திருவாய்மொழி.723

பாசுர எண்: 3513

பாசுரம்
வந்தெய்து மாறறி யேன்மல்கு
      நீலச் சுடர்தழைப்ப,
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு
      மாணிக்கம் சேர்வதுபோல்,
அந்தர மேல்செம்பட் டோ டடி
      உந்திகை மார்வுகண்வாய்,
செஞ்சுடர்ச் சோதி விடவுறை
      என்திரு மார்பனையே. 7.6.6

Summary

I know not how to see the Lord with Lakshmi on his chest.  He looks like a brilliant gem, spreading a flood of blue effulgence.  His feet and hands, lips and eyes, chest and navel are like sparks of dazzling red blowing everywhere

திருவாய்மொழி.724

பாசுர எண்: 3514

பாசுரம்
என்திரு மார்பன் தன்னையென்
      மலைமகள் கூறன்தன்னை,
என்றுமென் நாமக ளையகம்
      பால்கொண்ட நான்முகனை,
நின்ற சசிபதி யைநிலங்
      கீண்டெயில் மூன்றெரித்த,
வென்று புலம்துரந் தவிசும்
      பாளியைக் காணேனோ. 7.6.7

Summary

My Lord with Lakshmi on his chest, is the Lord with Parvati on his half, and the Lord with Sarasvati on his face, and the Lord of Indrani too.  He lifted the Earth, burnt the three cities, subdued his senses and rules the world of the celestials,  Alas, I do not see him!

திருவாய்மொழி.725

பாசுர எண்: 3515

பாசுரம்
ஆளியைக் காண்பரி யாயரி
      காண்நரி யாய்,அரக்கர்
ஊளையிட் டன்றிலங்கைகடந்
      துபிலம் புக்கொளிப்ப,
மீளியம் புள்ளைக் கடாய்விறல்
      மாலியைக் கொன்று,பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த்
      தானையும் காண்டுங்கொலோ? 7.6.8

Summary

Like horses before a ganayle, like foxes before a lion, the demons howled and left their haunts and went into hiding, when the Garuda-Lord killed the fierce Mail and stacked bodies like a mountain, Oh, can we not see him too?

திருவாய்மொழி.726

பாசுர எண்: 3516

பாசுரம்
காண்டுங்கொ லோநெஞ்ச மே.கடி
      யவினை யேமுயலும்,
ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக்f
      கன்fகுலத் தைத்தடிந்து,
மீண்டுமவன் தம்பிக்கே விரி
      நீரிலங்கையருளி,
ஆண்டுதன் சோதிபுக் கவம
      ரர்அரி யேற்றினையே? 7.6.9

Summary

Can we see him too, O Heart? He destroyed the demon clan of deathly might and wickedness, and gave the kingdom to the younger brother, then himself ruled like a lion among gods in abounding glory

திருவாய்மொழி.727

பாசுர எண்: 3517

பாசுரம்
ஏற்றரும் வைகுந்தத் தையருளும்
      நமக்கு, ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
      மாயங்க ளேயியற்றி,
கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க்
      காயக்கொடுஞ் சேனைதடிந்து,
ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ்
      சோதிபுக் கஅரியே. 7.6.10

Summary

He took birth in the cowherd-clan, did many wondrous deeds, killed kamsa, befriended the Pandavas, and destroyed the armies, Full of patient goodness, he shall by his grace give us the precious ascent to Vaikunta, Haril.

திருவாய்மொழி.728

பாசுர எண்: 3518

பாசுரம்
புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே. (2) 7.6.11

திருவாய்மொழி.729

பாசுர எண்: 3519

பாசுரம்
ஏழையர் ஆவியுண் ணுமிணைக்
      கூற்றங்கொ லோவறியேன்,
ஆழியுங் கண்ண பிராந்திருக்
      கண்கள்கொ லோவறியேன்,
சூழவும் தாமரை நாண்மலர்
      போல்வந்து தோன்றும்கண்டீர்,
தோழியர் காள்.அன்னை மீர்.என்fசெய்
      கேந்துய ராட்டியேனே? (2) 7.7.1

Summary

Are they two sentinels of death, come to devour the souls of females, or are they the beautiful eyes of the ocean-hued Lord?, -I know not what they are. All around they appear, like day-fresh lotus flowers. Oh, see!  O Sinful me! Sakhis! Ladies!  What shall I do?

திருவாய்மொழி.730

பாசுர எண்: 3520

பாசுரம்
ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை
      மீரென்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
      யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு
      மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளக் கின்
      சுடரய்நிற்கும் வாலியதே. 7.7.2

Summary

O Ladies, what use punishing me with nudges and abuse? Is it a tendril or stem of a grown Kalpa creeper?, I know not, -the beautiful nose of the thief-Lord enters my soul, strongly like a radiant lamp hanging on a chain

Enter a number between 1 and 4000.