திருவாய்மொழி
திருவாய்மொழி.751
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3541
பாசுரம்
என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? (2) 7.9.1
Summary
Oh, How shall I sing of my radiant first-cause Lord? Day by day he makes me rise higher and higher. Each day he makes me his own, and sings through me his praise in Tamil verse
திருவாய்மொழி.752
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3542
பாசுரம்
என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,
என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,
தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என்
முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே. 7.9.2
Summary
Today he has rendered my sweet soul count worthy, Making it appear like I was singing with words mine, he with words his, has sung his praise, what a wonder!
திருவாய்மொழி.753
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3543
பாசுரம்
ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்
நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ? 7.9.3
Summary
He entered my speech and made me acknowledge him. He sings his own songs of praise through the words of pure-hearted devotees. How can I forget the first-cause Lord in my speech?
திருவாய்மொழி.754
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3544
பாசுரம்
அப்பனை யென்று மறப்பனென் னாகியே,
தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,
ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? 7.9.4
Summary
Can I forget my father, who through my songs, has sung his own praise? He liberates me from beginningless Karma, and roams about ensuring my well-being
திருவாய்மொழி.755
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3545
பாசுரம்
சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி,
நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கி என் னால்தன்னை,
பார்பரவு இன்கவி பாடும் பரமரே. 7.9.5
Summary
He made me his and through me, song sweet songs that the worlds praise. I only uttered empty words, while he filled them with meaning
திருவாய்மொழி.756
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3546
பாசுரம்
இன்கவி பாடும் பரம கவிகளால்,
தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே. 7.9.6
Summary
My Lord of Vaikunta has preferred to blend with me and sing his praise. He did not choose worthy poets of great words and merit for this
திருவாய்மொழி.757
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3547
பாசுரம்
வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,
செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,
வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,
செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ. 7.9.7
Summary
When shall I know to my fill the Lord who destroyed my karmas? He made me his andthrough my words has sung his own songs on Vaikunta
திருவாய்மொழி.758
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3548
பாசுரம்
ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,
பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே? 7.9.8
Summary
The Lord of discus made me his, gave me excellence, and sang his sweet songs. Even if I mix and drink the whole Earth, will if quench my thirst for singing?
திருவாய்மொழி.759
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3549
பாசுரம்
திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,
மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே? 7.9.9
Summary
Even if I drink through past and future, will that quench my thirst for singing his glory? He favoured me by making this mindless me his, and with my tongue he song his moving songs
திருவாய்மொழி.760
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3550
Summary
What can I give in return for his favour of singing with my tongue? I wonder! The songs in his praise are so moving, there is nothing of equal merit in this or another word.