Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.761

பாசுர எண்: 3551

பாசுரம்
இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,
அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே. (2) 7.9.11

Summary

O Lord of celestials bearing a fierce discus in hand that cuts, pulverises and grinds to dust the wicked Asura-clans! O Lord of Venkatam with water-tanks that brim with lotuses like fire! Grace that this love-brimming servant joins you lotus test.

திருவாய்மொழி.762

பாசுர எண்: 3552

பாசுரம்
இன்பம் பயக்க எழில்மலர்
      மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன்
      வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா
      ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து
      கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. (2) 7.10.1

Summary

When will the day be when I ambulate with folded hands, the Lord who dearly resides in Tiruvaranvilai amid groves with lotus-dame Lakshmi on his chest? He is our Lord who rules us sweetly, spreading  happiness over the seven worlds

திருவாய்மொழி.763

பாசுர எண்: 3553

பாசுரம்
ஆகுங்கொல் ஐயமொன் றின்றி
      அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த
      திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள்
      நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி
      வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. 7.10.2

Summary

He came as a manikin and grew tall; dispelling doubts he grew and measured the Earth with his two feet.  He resides in Tiruvaranvilal, where pennoned mansions touch the sky, When will I worship him with fresh water and folded hands?

திருவாய்மொழி.764

பாசுர எண்: 3554

பாசுரம்
கூடுங்கொல் வைகலும் கோவிந்த
      னைமது சூதனைக் கோளரியை,
ஆடும் பறவை மிசைக்கண்டு
      கைதொழு தன்றி யவனுறையும்,
பாடும் பெரும்புகழ் நான்மறை
      வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
நீடு பொழில்திரு வாறன்
      விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. 7.10.3

Summary

Oh, when will worship him instead of seeing him ride away on his Garuda?  He is Govinda, Madhusudana, Naraharl, residing in Tiruvaranvilai, -surrounded by gardens, -famed for the four Vedas, the five sacrifices and the six Angas

திருவாய்மொழி.765

பாசுர எண்: 3555

பாசுரம்
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு
      தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்
      நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல
      கீசன் வடமது ரைப்பிறந்த,
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி
      ரான்றன் மலரடிப் போதுகளே. 7.10.4

Summary

Will I ever contemplate without end from here the lotus-feet of the beautiful Krishna?  The glorious Lord of the worlds was born in Mathura.  He resides in Tiruvaranvilai amid sugarcane and paddy

திருவாய்மொழி.766

பாசுர எண்: 3556

பாசுரம்
மலரடிப் போதுகள் என்னெஞ்சத்
      தெப்பொழு துமிருத் திவணங்க,
பலரடி யார்முன் பருளிய
      பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
மலரில் மணிநெடு மாடங்கள்
      நீடு மதில்திரு வாறன்விளை,
உலகம் மலிபுகழ் பாடநம்
      மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. 7.10.5

Summary

Through contemplation and worship of his feet forever, if we sing his boundless praise, our karmas will all vanish.  He resides in Tiruvaranvilai amid mansions and fall walls, -the friend of many great devotees of yore

திருவாய்மொழி.767

பாசுர எண்: 3557

பாசுரம்
ஒன்றும்நில் லாகெடும் முற்றவும்
      தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பிணி
      நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம்
      துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான்,
நின்ற அணிதிரு வாறன்
      விளையென்னும் நீணக ரமதுவே. 7.10.6

Summary

Devotees if we contemplate his frame, our karmas will vanish.  He is within me at all times, praised by my heart.  He then fought and won battles to wed his Rukmini.  He resides in Tiruvaranvilai, the city of great fame

திருவாய்மொழி.768

பாசுர எண்: 3558

பாசுரம்
நீணக ரமது வேமலர்ச்
      சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி
      ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக்கட்பி
      ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித்
      தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. 7.10.7

Summary

The city of Tiruvaranvilal is surrounded by gardens.  He resides there as Krishna, Lord of the celestials, in the yore he entered Sana’s fortress, -while Siva fled, -and cut asunder the Asura’s thousand arms, he is our only refuge

திருவாய்மொழி.769

பாசுர எண்: 3559

பாசுரம்
அன்றிமற் றொன்றிலம் நின்சர
      ணே. என் றகலிரும் பொய்கையின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய
      ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,
சென்றங் கினிதுறை கின்ற
      செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?
      தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8

Summary

The tusker standing in deep waters lifted his trunk and walled, “O Krishna, I have no refuge, other than you!” The Lord ended his misery then; he lives in Tiruvaranvilai, If we go around him in worship, our karmas will all vanish

திருவாய்மொழி.770

பாசுர எண்: 3560

பாசுரம்
தீவினை யுள்ளத்தின் சார்வல்ல
      வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும்
      அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
யாவரும் வந்து வணங்கும்
      பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக்
      கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. 7.10.9

Summary

Even if my karmas vanish and I ascend Heaven, my thoughts will still be, “When will I praise and worship him?”. With proper deeds and proper heart and proper words alone, O When will I go around Tiruvaranvilai

Enter a number between 1 and 4000.