Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.841

பாசுர எண்: 3631

பாசுரம்
அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,
இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,
பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,
மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே. 8.7.3

Summary

More precious than the three worlds, he resides in me dispelling darkness.  What a strange wonder this is! More than this, what grace can there be?

திருவாய்மொழி.842

பாசுர எண்: 3632

பாசுரம்
மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,
தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,
தேயம் திகழும்தன் திருவருள் செய்தே. 8.7.4

Summary

Gopala my Lord is the lion of the celestials.  He shall deceive me no more with his tricks. He placed his pure radiance within me.  His grace shines m all the worlds!

திருவாய்மொழி.843

பாசுர எண்: 3633

பாசுரம்
திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,
புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,
புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே? 8.7.5

Summary

The radiant Lord is praised by all the worlds, like a radiant mountain gem, he came and stood in my heart does anything else matter now?

திருவாய்மொழி.844

பாசுர எண்: 3634

பாசுரம்
பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,
கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,
திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே. 8.7.6

Summary

If he gave me something else of value then whom would he give himself to?  He stands in me like a mountain-gem, with coral lips, lotus chest; limbs and eyes, and lotus nave!

திருவாய்மொழி.845

பாசுர எண்: 3635

பாசுரம்
செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,
செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,
அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே. 8.7.7

Summary

He stands before me with lotus navel, coral lips and pearl-white teeth, wearing radiant ear- rings, He is of exceeding effulgence, – Oh, with a smile I could embrace! He stays in my heart, I do not know a greater grace

திருவாய்மொழி.846

பாசுர எண்: 3636

பாசுரம்
அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,
வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,
சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்
நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே. 8.7.8

Summary

The Lord graces for nothing those whom he chooses.  A greater grace I do not know.  Containing the three worlds in himself, he has come to stay in my small heart

திருவாய்மொழி.847

பாசுர எண்: 3637

பாசுரம்
வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,
வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,
வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே. 8.7.9

Summary

The Lord who contains the three worlds and all beings and celestials stands as one, forever unchanging ,  I have him my heart forever!

திருவாய்மொழி.848

பாசுர எண்: 3638

பாசுரம்
வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்பொதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே. 8.7.10

Summary

I have placed in the recess of my heart the Lord who sleeps on a hooded serpent deep in the cool ocean of Milk.  I shall never tire of contemplating him

திருவாய்மொழி.849

பாசுர எண்: 3639

பாசுரம்
சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,
அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்
விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே. (2) 8.7.11

Summary

This decad of the thousand songs by Satakopan of kurugur city addressing the Lord on hooded couch will secure the grace of the red-eyed Lord cutting rebirth

திருவாய்மொழி.850

பாசுர எண்: 3640

பாசுரம்
கண்கள் சிவந்து பெரியவாய்
      வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகு
      விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
      நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியான்
      ஒருவன் அடியே னுள்ளானே. (2) 8.8.1

Summary

Someone stands within me with large red eyes and ripe coral lips, pearly white teeth and radiant dangling earnings shaped like Makara-fish.  Dark as the rain-cloud, he wears a radiant crown, has four arms, and holds a beautiful bow, discus, conch, mace

Enter a number between 1 and 4000.