திருவாய்மொழி
திருவாய்மொழி.881
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3671
பாசுரம்
வாய்க்க தமியேற் கூழிதோ
றூழி யூழி மாகாயாம்
பூக்கொள் மேனி நான்குதோள்
பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நீக்க மில்லா அடியார்தம்
அடியார் அடியார் அடியாரெங்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே. 9.9.10
Summary
Through life after life, in every age after age, I only wish to be born in the family of bonded serfs of my masters, the servants of the servants of the Lord, -who has a kaya hue, four arms, and wields a discu
திருவாய்மொழி.882
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3672
பாசுரம்
நல்ல கோட்பாட் டுலகங்கள்
மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே. (2) 9.9.11
Summary
This good decad of the thousand songs by kurugur Satakopan addressing Krishna, Lord-of-blue-lotus-hue, who fills the Universe, will secure a happy domestic life for those who can sing it
திருவாய்மொழி.883
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3673
பாசுரம்
கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத் தவர்பிறரும்,
கண்ட தோடு பட்டதல்லால் காதல்மற்று யாதுமில்லை,
எண்டி சையும் கீழும்மேலும் முற்றவு முண்டபிரான்,
தொண்ட ரோமா யுய்யலல்லா லில்லைகண் டீர்துணையே. (2) 9.1.1
Summary
Wife and children, friends and relatives, have no love save for what they see you have. The Lord who swallowed the eight Quarters, Heaven, Hell and all else, is our only road to freedom, his worship alone is proper
திருவாய்மொழி.884
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3674
பாசுரம்
துணையும் சார்வு மாகுவார்போல் சுற்றத் தவர்பிறரும்,
அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்,
கணையொன் ராலே யேழ்மாமரமு மெய்தேங் கார்முகிலை,
புணையென் றுய்யப் போகிலல்லா லில்லைகண் டீர்பொருளே. 9.1.2
Summary
Friends and relatives gives you their time, but sup your wealth like leeches till it lasts. Seek the prince who shot an arrow through seven trees, he is an oasis of freedom. Other than him there is no way, this is certain
திருவாய்மொழி.885
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3675
பாசுரம்
பொருள்கை யுண்டாய்ச் செல்லக்
காணில் போற்றியென் றேற்றெழுவர்,
இருள்கொள் துன்பத் தின்மை
காணில் என்னேஎன் பாருமில்லை,
மருள்கொள் செய்கை யசுரர்
மங்க வடமது ரைப்பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல்
அல்லால் இல்லைகண் டீரரணே. 9.1.3
Summary
Seeing you walk in affluence, they will come forward to wish you. Seeing you in poverty, not one will ask what happened. The Lord was born in Mathura to destroy wicked Asura, Love and serve him other than him there is really no refuge
திருவாய்மொழி.886
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3676
பாசுரம்
அரணம் ஆவர் அற்ற
காலைக் கென்றென் றமைக்கப்பட்டார்,
இரணம் கொண்ட தெப்பர்
ஆவர் இன்றியிட் டாலுமஃஅதே,
வருணித் தென்னே வடமது
ரைப்பி றந்தவன் வண்புகழே,
சரணென் றுய்யப் போகல்
அல்லால் இல்லைகண் டீர்சதிரே. 9.1.4
Summary
Those who are placed as trustees of your wealth, will behave like petty moneylenders in bad days, -what use, need we dilate on this? The only wisdom there is lies in praising the Lord of Mathura, He is our hope and refuge
திருவாய்மொழி.887
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3677
பாசுரம்
சதுரம் என்று தம்மைத்
தாமே சம்மதித் தின்மொழியார்,
மதுர போக மதுவுற்
றவரே வைகிமற் றொன்றுறுவர்,
அதிர்கொள் செய்கை யசுரர்
மங்க வடமது ரைப்பிறந்தாற்கு ,
எதிர்கொள் ஆளாய் உய்யல்
அல்லால் இல்லைகண் டீரின்பமே. 9.1.5
Summary
Those who enjoyed sweet union with pampered parrot-like- dames will also experience something else later, The Lord of Mathura destroyed many frightening Asuras, So wait on for his servitude, that is the only joy there is
திருவாய்மொழி.888
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3678
பாசுரம்
இல்லை கண்டீர் இன்பம்
அந்தோ. உள்ளது நினையாதே,
தொல்லை யார்க ளெத்த னைவர்
தோன்றிக் கழிந்தொழிந்தார்?
மல்லை மூதூர் வடம
துரைப்பி றந்தவன் வண்புகழே,
சொல்லி யுய்யப் போகல்
அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே. 9.1.6
Summary
There is no joy, that is certain, Alas, not realising this, how many men have come and passed away in vain since yore! In short, praise the Lord who took birth in the ancient Mathura city, other than this there is nothing
திருவாய்மொழி.889
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3679
பாசுரம்
மற்றொன் றில்லை சுருங்கச்
சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,
சிற்ற வேண்டா சிந்திப்
பேயமை யும்கண் டீர்களந்தோ.
குற்றமன் றெங்கள் பெற்றத்
தாயன் வடமது ரைப்பிறந்தான்,
குற்ற மில்சீர் கற்று
வைகல் வாழ்தல்கண் டீர்குணமே. 9.1.7
Summary
There is nothing else, I have said so, have no doubt. For all beings on Earth, even thinking of him will do, Alas! At least in bearing his names there is nothing wrong. So recite the names of the perfect cowherd-lad of Mathura
திருவாய்மொழி.890
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3680
பாசுரம்
வாழ்தல் கண்டீர் குணமி
தந்தோ. மாயவன் அடிபரவி,
போழ்து போக வுள்ள
கிற்கும் புன்மையி லாதவர்க்கு,
வாழ்து ணையா வடம
துரைப்பி றந்தவன் வண்புகழே,
வீழ்து ணையாய்ப் போமி
தனில்யா துமில்லை மிக்கதே. 9.1.8
Summary
A life time spent in worshipping the feet of Krishna is good. Alas, there could be nothing greater than singing his praise. The Lord was born in Northern Mathura city to protect us pure-hearted devotees, who desire him alone