Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.901

பாசுர எண்: 3691

பாசுரம்
எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
      இணையடி தொழுதெழுந் திறைஞ்சி
தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால்
      தலைதலைச் சிறந்தபூ சிப்ப,
திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய்.
      திருவைகுந் தத்துள்ளாய். தேவா,
இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள்
      இருந்திடாய் வீற்றிடங் கொண்டே. 9.2.8

Summary

O Lord of moon-touching-mansions-Tiruppulingudi!, Lord of Srivaikundam!  May the whole world rise and worship your feet, vying with one another, to praise with all the love in their hearts and power in their speech!  Come before our eyes one day, choose a niche and sit with us

திருவாய்மொழி.902

பாசுர எண்: 3692

பாசுரம்
வீற்றிடங் கொண்டு வியங்கொள்மா ஞாலத்
      திதனுளு மிருந்திடாய், அடியோம்
போற்றியோ வாதே கண்ணினை குளிரப்
      புதுமலர் ஆகத்தைப் பருக,
சேற்றிள வாளை செந்நெலூ டுகளும்
      செழும்பணைத் திருப்புளிங் குடியாய்,
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
      கொடுவினைப் படைகள்வல் லானே. 9.2.9

Summary

O Lord of Tiruppulingudi where fish dance in golden paddy fields, choose a niche and sit here too, praised by all the worlds, that we devotees may hover like bees and sip the nectar of your fresh blossom face.  O Lord who routed Asuras by the score, wielding many fierce weapons!

திருவாய்மொழி.903

பாசுர எண்: 3693

பாசுரம்
கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்
      கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே.
      கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை
      நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள்
      கூவுதல் வருதல்செய் யாயே. 9.2.10

Summary

O Lord of happy-fields Tiruppulingudi, my ambrosia who destroys terrible Asuras!  Lord wielding many fierce weapons.  Lord who destroyed the gods’ woes.  The peerless lotus-dame Lakshmi and Earth Dame press your lotus feet.  That I too may press your feet, come to me or call me unto yourself!

திருவாய்மொழி.904

பாசுர எண்: 3694

பாசுரம்
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
      குரைகடல் கடைந்தவன் தன்னை,
மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல்
      வழுதிநா டஞ்சட கோபன்,
நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும்
      இவையுமோர் பத்தும்வல் லார்கள்,
ஓவுத லின்றி யுலகம்மூன் றளந்தான்
      அடியிணை யுள்ளத்தோர் வாரே. (2) 9.2.11

Summary

This decad of the sweet songs by gushing Porunal’s Valudi-land-Satakopan addressing the Lord who churned the ocean, asking him to come to him or call to himself, -those who master it will secure the feet of the Lord

திருவாய்மொழி.905

பாசுர எண்: 3695

பாசுரம்
ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும்
பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன்
காரா யினகா ளநன்மே னியினன்,
நாரா யணன்நங் கள்பிரான் அவனே. (2) 9.3.1

Summary

The peerless Lord protector of the seven worlds in a thousand ways, has a thousand names.  The Lord of dark rain-cloud hue, he is our own Lord Narayana

திருவாய்மொழி.906

பாசுர எண்: 3696

பாசுரம்
அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,
அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. 9.3.2

Summary

He made the wide Earth and lifted it. He swallowed it, remade it and measured it,   The ‘he’ Brahma, the ‘he’, Indra and the ‘he’, Siva, are also him.   He is all else too, we know this

திருவாய்மொழி.907

பாசுர எண்: 3697

பாசுரம்
அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே. 9.3.3

Summary

The Vedic texts have revealed Hari as the substance of consciousness.  O Thinking men, worship him as the cure for all ills

திருவாய்மொழி.908

பாசுர எண்: 3698

பாசுரம்
மருந்தே நங்கள் போகம கிழ்ச்சிக்கென்று,
பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான்
கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும்தே வலைசோ ரேல்கண்டாய் மனமே. 9.3.4

Summary

Extolled by hordes of celestials as the Soma of their bliss, the dark Krishna is our liberation, Note, O Heart, so never leave him

திருவாய்மொழி.909

பாசுர எண்: 3699

பாசுரம்
மனமே. உன்னைவல் வினையேன் இரந்து,
கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய்,
புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல்,
இனமே துமிலா னையடை வதுமே. 9.3.5

Summary

The Lord of fragrant Tulasi garland is one without a second, experience him, I beg of you, O Heart, pray take heed; Never let him leave you

திருவாய்மொழி.910

பாசுர எண்: 3700

பாசுரம்
அடைவ துமணி யார்மலர் மங்கைதோள்,
மிடைவ துமசு ரர்க்குவெம் போர்களே,
கடைவ தும்கட லுள் அமுது, என்மனம்
உடைவ தும் அவற் கேயொருங் காகவே. 9.3.6

Summary

Joy is the lotus-dame’s embrace, hard is the constant war with Asura. Churning is the Ocean’s ambrosia.  Breaking is my hart united with him

Enter a number between 1 and 4000.