Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.867

பாசுர எண்: 3657

பாசுரம்
மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. 8.9.7

Summary

Betel creepers with tender leaves embrace the Areca trunks there.  The cool breeze blows over ripe plantain fruit and wafts the fragrance over caressing coconut leaves in Tiruppuliyur. This young one has attained the feet of the affluent Krishna there

திருவாய்மொழி.868

பாசுர எண்: 3658

பாசுரம்
மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச்
      சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள்
      நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை
      மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம்
      அல்லால் பரவா ளிவளே. 8.9.8

Summary

O Ladies!  How can I make you understand? Good scholars of the Sanskrit Vedas feed the fire whose smoke clouds the land of the celestials in cool Puliyur, home of the serpent recliner, she only prates his names forever

திருவாய்மொழி.869

பாசுர எண்: 3659

பாசுரம்
பரவா ளிவள்நின் றிராப்பகல்
      பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி
      வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக்
      கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப்
      புலியூர்ப்புக ழன்றிமற்றே. 8.9.9

Summary

Night and day she speaks only of the cloud-hued Lord who resides in Tiruppuliyur surrounded by fertile fields, where alligator ponds are aflame with red lotus blooms, and sounds of beautiful music rise with Vedic Chants incessantly

திருவாய்மொழி.870

பாசுர எண்: 3660

பாசுரம்
அன்றிமற் றோருபாய மென்னிவ
      ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக்
      கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக்
      குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு
      வருளாமிவள் நேர்ப்பட்டதே. 8.9.10

Summary

Or else how does her person waft the fragrance of Tulase? She surely has received the favours of the Tiruppuliyur Lord, who stands as a beacon in the Southern Kuttanadu, amid beautiful jewelled mansions rising by the score

திருவாய்மொழி.871

பாசுர எண்: 3661

பாசுரம்
நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும்
      நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர்
      தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள்
      இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார்
      நெடுமாற்கடி மைசெய்யவே. (2) 8.9.11

Summary

This decad of the beautiful thousand songs by Satakopan, devotee of the devotees of the Lord who is master of the three worlds, will  secure a life of service to the Lord for those who recite it

திருவாய்மொழி.872

பாசுர எண்: 3662

பாசுரம்
நெடுமாற் கடிமை செய்வேன்போல்
      அவனை கருத வஞ்சித்து,
தடுமாற் றற்ற தீக்கதிகள்
      முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்,
கொடுமா வினையேன் அவனடியார்
      அடியே கூடும் இதுவல்லால்,
விடுமா றென்ப தென்னந்தோ.
      வியன்மூ வுலகு பெறினுமே? (2)9.9.1

Summary

I only thought I would serve the Lord Lo, my evil karmas disappeared instantly without a hitch!  But come to think of it, other than serving his devotees, can there by a greater wealth in the three worlds?

திருவாய்மொழி.873

பாசுர எண்: 3663

பாசுரம்
வியன்மூ வுலகு பெறினும்போய்த்
தானே தானே யானாலும்,
புயல்மே கம்போல் திருமேனி
அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,
சயமே யடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான்பெற்ற
துறுமோ பாவி யேனுக்கே? 9.9.2

Summary

The wealth of the three worlds and the enjoyment of one’s self in heaven, put together, -will it equal the joy I have found here and now, through serving the selfless devotees of the cloud-hued Lord’s lotus-feet?

திருவாய்மொழி.874

பாசுர எண்: 3664

பாசுரம்
உறுமோ பாவி யேனுக்கிவ்
      வுலகம் மூன்றும் உடன்நிறைய,
சிறுமா மேனி நிமிர்த்தவென்
      செந்தா மரைக்கண் திருக்குறளன்
நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப்
      புகுதல் அன்றி அவனடியார்,
சிறுமா மனிச ராயென்னை
      ஆண்டா ரிங்கே திரியவே. 9.9.3

Summary

Is it proper for me to join the lotus feet of the beautiful manikin with lotus eyes, -who extended his small frame and took the worlds, -when his devotees, great humble men, my masters, roam the Earth?

திருவாய்மொழி.875

பாசுர எண்: 3665

பாசுரம்
இங்கே திரிந்தேற் கிழக்குற்றென்.
      இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,
செங்கோ லத்த பவளவாய்ச்
      செந்தா மரைக்க ணென்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்
      புலன்கொள் வடிவென் மனத்தாய்
அங்கேய் மலர்கள் கையவாய்
      வழிபட் டோ ட அருளிலே? 9.9.4

Summary

My Lord of coral lips and red lotus eyes swallowed and remade the Earth; I sing his glories, I worship his grace with fit flowers in my hands, I have his form in my heart, so what do I lack now?

திருவாய்மொழி.876

பாசுர எண்: 3666

பாசுரம்
வழிபட் டோ ட அருள்பெற்று
      மாயன் கோல மலரடிக்கீழ்,
சுழிபட் டோ டும் சுடர்ச்சோதி
      வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,
இழிபட் டோ டும் உடலினிற்
      பிறந்து தன்fசீர் யான்கற்று,
மொழிபட் டோ டும் கவியமுத
      நுகர்ச்சி யுறுமோ முழுதுமே? 9.9.5

Summary

Were I blest with service to his lotus feet, were I to enjoy his swirling flood of heavenly radiance, would that compare with this birth, -albeit in a lowly body, -where I sit and enjoy singing his names in a flood of sweet poetry?

Enter a number between 1 and 4000.