Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.887

பாசுர எண்: 3677

பாசுரம்
சதுரம் என்று தம்மைத்
      தாமே சம்மதித் தின்மொழியார்,
மதுர போக மதுவுற்
      றவரே வைகிமற் றொன்றுறுவர்,
அதிர்கொள் செய்கை யசுரர்
      மங்க வடமது ரைப்பிறந்தாற்கு ,
எதிர்கொள் ஆளாய் உய்யல்
      அல்லால் இல்லைகண் டீரின்பமே. 9.1.5

Summary

Those who enjoyed sweet union with pampered parrot-like- dames will also experience something else later,  The Lord of Mathura destroyed many frightening Asuras, So wait on for his servitude, that is the only joy there is

திருவாய்மொழி.888

பாசுர எண்: 3678

பாசுரம்
இல்லை கண்டீர் இன்பம்
      அந்தோ. உள்ளது நினையாதே,
தொல்லை யார்க ளெத்த னைவர்
      தோன்றிக் கழிந்தொழிந்தார்?
மல்லை மூதூர் வடம
      துரைப்பி றந்தவன் வண்புகழே,
சொல்லி யுய்யப் போகல்
      அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே. 9.1.6

Summary

There is no joy, that is certain, Alas, not realising this, how many men have come and passed away in vain since yore!  In short, praise the Lord who took birth in the ancient Mathura city, other than this there is nothing

திருவாய்மொழி.889

பாசுர எண்: 3679

பாசுரம்
மற்றொன் றில்லை சுருங்கச்
      சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,
சிற்ற வேண்டா சிந்திப்
      பேயமை யும்கண் டீர்களந்தோ.
குற்றமன் றெங்கள் பெற்றத்
      தாயன் வடமது ரைப்பிறந்தான்,
குற்ற மில்சீர் கற்று
      வைகல் வாழ்தல்கண் டீர்குணமே. 9.1.7

Summary

There is nothing else, I have said so, have no doubt. For all beings on Earth, even thinking of him will do, Alas! At least in bearing his names there is nothing wrong.  So recite the names of the perfect cowherd-lad of Mathura

திருவாய்மொழி.890

பாசுர எண்: 3680

பாசுரம்
வாழ்தல் கண்டீர் குணமி
      தந்தோ. மாயவன் அடிபரவி,
போழ்து போக வுள்ள
      கிற்கும் புன்மையி லாதவர்க்கு,
வாழ்து ணையா வடம
      துரைப்பி றந்தவன் வண்புகழே,
வீழ்து ணையாய்ப் போமி
      தனில்யா துமில்லை மிக்கதே. 9.1.8

Summary

A life time spent in worshipping the feet of Krishna is good.  Alas, there could be nothing greater than singing his praise.  The Lord was born in Northern Mathura city to protect us pure-hearted devotees, who desire him alone

திருவாய்மொழி.891

பாசுர எண்: 3681

பாசுரம்
யாது மில்லை மிக்க
      தனிலென் றன்ற துகருதி,
காது செய்வான் கூதை
      செய்து கடைமுறை வாழ்கையும்போம்,
மாது கிலிங்கொ டிக்கொள்
      மாட வடமது ரைப்பிறந்த,
தாது சேர்தாள் கண்ணன்
      அல்லால் இல்லைகண் டீரிசரணே. 9.1.9

Summary

Those who pursue limited ends as if the infinite is not, -they only waste away their lives, alas! –like widening their ear-bore and losing their ear ring! So take refuge in the pennon-mansioned Mathura city’s Lord

திருவாய்மொழி.892

பாசுர எண்: 3682

பாசுரம்
கண்ணன் அல்லால் இல்லை
      கண்டீர் சரணது நிற்கவந்து,
மண்ணின் பாரம் நீக்கு
      தற்கே வடமது ரைப்பிறந்தான்,
திண்ண மாநும் முடைமை
      யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ,
எண்ண வேண்டா நும்ம
      தாதும் அவனன்றி மற்றில்லையே. 9.1.10

Summary

There is no refuge other than Krishna, “It is certain, to prove it he took birth in Mathura and rid the world of its burden.  If you consider anything as yours.  Sacrifice it to him.  Have no doubt, devotees, all is by his grace

திருவாய்மொழி.893

பாசுர எண்: 3683

பாசுரம்
ஆதும் இல்லை மற்ற
      வனிலென் றதுவே துணிந்து,
தாது சேர்தோள் கண்ண
      னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,
தீதி லாத வொண்தமிழ்
      கள் இவை ஆயிரத்து ளிப்பத்தும்,
ஓத வல்ல பிராக்கள்
      நம்மை யாளுடை யார்கள்பண்டே. (2) 9.1.11

Summary

This decad of the faultless thousand songs by kurugur Satakopan who took refuge of the feet of garland –chested Krishna, -those who can sing it will be our eternal masters!

திருவாய்மொழி.894

பாசுர எண்: 3684

பாசுரம்
பண்டைநா ளாலே நிந்திரு வருளும்
      பங்கயத் தாள்திரு வருளும்
கொண்டு,நின் கோயில் சீய்த்துப்பல் படிகால்
      குடிகுடி வழிவந்தாட் செய்யும்,
தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன்
      தாமரைக் கண்களால் நோக்காய்,
தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த
      திருபுளிங் குடிக்கிடந் தானே. (2) 9.2.1

Summary

O Lord reclining in Tiruppulingudi surrounded by surging Parunal waters, Pray look at us with your lotus eyes, and part your silent lips.  From the days of yore, through your grace and the lotus-lady’s grace, we have thronged your temple and served you in many ways as bonded serfs

திருவாய்மொழி.895

பாசுர எண்: 3685

பாசுரம்
குடிகிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த
      அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன்
அடிக்கட வாதே வழிவரு கின்ற
      அடியரோர்க் கருளி,நீ யொருநாள்
படிக்கள வாக நிமிர்த்தநின் பாத
      பங்கய மேதலைக் கணியாய்,
கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத்
      திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.2

Summary

O Lord reclining in Tiruppulingudi surrounded by golden walls and fertile fields!  Through generations as bonded serfs, we have served your golden feet, never transgressing the limits of your holy domain.  May your lotus feet-that-measured-the-Earth decorate our heads one day

திருவாய்மொழி.896

பாசுர எண்: 3686

பாசுரம்
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்
      கிடத்தியுன் திருவுடம் பசைய,
தொடர்ந்துகுற் றவேல் செய்துதொல் லடிமை
      வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடந்தோள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன்
      தாமரை மங்கையும் நீயும்,
இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய்
      திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.3

Summary

O Lord reclining in Tiruppulingudi!  May the three worlds gather and worship you, You lie sleeping day after day, -how long!, – till your body sores.  O Lord, hear your bonded serf of unbroken service petition to you; Pray open your lotus eyes and wake, and be seated with your dame Lakshmi

Enter a number between 1 and 4000.