Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.947

பாசுர எண்: 3737

பாசுரம்
வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்
பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. 9.6.10

Summary

I thought, “If ever I see him I will gobble him”, but before I could, he deceived me and hastily drank my all.  My dark Lord of Tirukkatkarai is smart!

திருவாய்மொழி.948

பாசுர எண்: 3738

பாசுரம்
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை,
கொடிமதிள் தெங்குரு கூர்ச்சட கோபஞ்சொல்,
வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்
முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே. (2) 9.6.11

Summary

This decad of the thousand songs by Satakopan of lvy-walled kurugur on the Lord who killed kamsa will destroy the mirage of the world, just see!

திருவாய்மொழி.949

பாசுர எண்: 3739

பாசுரம்
எங்கானல் அகங்கழிவாய்
      இரைத்தேர்ந்திங் கினிதமரும்,
செங்கால மடநாராய்.
      திருமூழிக் களத்துறையும்,
கொங்கார்பூந் துழாய்முடியெங்
      குடக்கூத்தர்க் கென்fதூதாய்,
நுங்கால்க ளென் தலைமேல்
      கெழுமீரோ நுமரோடே. (2) 9.7.1

Summary

O Good egret searching for worm in my garden mire!  Go to Tirumulikkalam as my messenger, to my pot-dancer Lord who wears the fragrant Tulasi; then you and all your kin may place your feet on my head

திருவாய்மொழி.950

பாசுர எண்: 3740

பாசுரம்
நுமரோடும் பிரியாதே
      நீரும்நும் சேவலுமாய்,
அமர்காதல் குருகினங்காள்.
      அணிமூழிக் களத்துறையும்,
எமராலும் பழிப்புண்டிங்
      கென்?தம்மால் இழிப்புண்டு,
தமரோடங் குறைவார்க்குத்
      தக்கிலமே. கேளீரே. 9.7.2

Summary

O Lovebird herons flocking with your mates and kin! I am spurned by him and scorned by me kin. What use living? Go ask my Lord who lives in Tirumulikkalam with his retinue; are we not fit for his company?

திருவாய்மொழி.951

பாசுர எண்: 3741

பாசுரம்
தக்கிலமே கேளீர்கள்
      தடம்புனல்வாய் இரைதேரும்,
கொக்கினங்காள். குருகினங்காள்.
      குளிர்மூழிக் களத்துறையும்,
செக்கமலத் தலர்போலும்
      கண்கைகால் செங்கனிவாய்,
அக்கமலத் திலைபோலும்
      திருமேனி யடிகளுக்கே. 9.7.3

Summary

O Flocking storks and herons searching for worms in my lake! The Lord resides in cool Tirumulikkalam,  His limbs and eyes are like lotus flowers, his dark hue is like the leaves.  Go ask him; are we not fit for his company

திருவாய்மொழி.952

பாசுர எண்: 3742

பாசுரம்
திருமேனி யடிகளுக்கு
      தீவினையேன் விடுதூதாய்
திருமூழிக் களமென்னும்
      செழுநகர்வாய் அணிமுகில்காள்,
திருமேனி யவட்கருளீர்
      என்றக்கால், உம்மைத்தன்
திருமேனி யொளியகற்றித்
      தெளிவிசும்பு கடியுமே? 9.7.4

Summary

O Beautiful clouds blowing towards prosperous Tirumulikkalam! Go as messengers to my beautiful Lord, and ask him to show himself to this wicked self. Why, would he strip you of your lustre and drive you away from his sky?

திருவாய்மொழி.953

பாசுர எண்: 3743

பாசுரம்
தெளிவிசும்பு கடிதோடித்
      தீவளைத்து மின்னிலகும்,
ஒளிமுகில்காள். திருமூழிக்
      களத்துறையும் ஒண்சுடர்க்கு,
தெளிவிசும்பு திருநாடாத்
      தீவினையேன் மனத்துறையும்,
துளிவார்கட் குழலார்க்கென்
      தூதுரைத்தல் செப்பமினே. 9.7.5

Summary

O Radiant clouds spinning in the sky with a fiery lightning hoop!  The heart of this wicked self is the Vaikunta of the radiant Lord who resides in Tirumulikkalam, Convey this to my Lord, whose coiffure drips with nectar

திருவாய்மொழி.954

பாசுர எண்: 3744

பாசுரம்
தூதுரைத்தல் செப்புமின்கள்
      தூமொழியாய் வண்டினங்காள்,
போதிரைத்து மதுநுகரும்
      பொழில்மூழிக் களத்துறையும்,
மாதரைத்தம் மார்வகத்தே
      வைத்தார்க்கென் வாய்மாற்றம்,
தூதுரைத்தல் செப்புதிரேல்
      சுடர்வளையும் கலையுமே. 9.7.6

Summary

O Sweet-lipped bumble-bees!  Go as my messengers to the Lord who keeps his dame on his chest, in Tirumulkkalam surrounded by nectar-dripping flower groves.  Repeat my worlds, “Radiant jewels and silk clothes”, to him

திருவாய்மொழி.955

பாசுர எண்: 3745

பாசுரம்
சுடர்வளுயும் கலையுங்கொண்டு
      அருவினையேன் தோள்துறந்த,
படர்புகழான் திருமூழிக்
      களத்துறையும் பங்கயக்கட்,
சுடர்பவள வாயனைக்கடு
      ஒருநாளோர் தூய்மாற்றம்,
படர்பொழில்வாய்க் குருகினங்காள்.
      எனக்கொன்று பணியீரே. 9.7.7

Summary

O Forest hens!  The infamous Lord of lotus eyes and coal lips who left my ill fated arms and took my silk and jewels with him resides in Tirumulikkalam,  Se him one day and speak a good word in my behalf

திருவாய்மொழி.956

பாசுர எண்: 3746

பாசுரம்
எனக்கொன்று பணியீர்கள்
      இரும்பொழில்வாய் இரைதேர்ந்து,
மனக்கின்பம் படமேவும்
      வண்டினங்காள். தும்பிகாள்,
கனக்கொள்திண் மதிள்புடைசூழ்
      திருமூழிக் களத்துறையும்,
புனல்கொள்கா யாமேனிப்
      பூந்துழாய் முடியார்க்கே. 9.7.8

Summary

O Bumble bees and beetles hovering over large flowers!  Speak in my favour to the Lord, your words are sweet to the heart.   He resides in the hue of kaya flowers, and wears Tulasi blossoms

Enter a number between 1 and 4000.