Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.17

பாசுர எண்: 2807

பாசுரம்
பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6

Summary

The Lord has no attachment. He exists everywhere. Become freed of attachments and merge with him fully.

திருவாய்மொழி.18

பாசுர எண்: 2808

பாசுரம்
அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7

திருவாய்மொழி.19

பாசுர எண்: 2809

பாசுரம்
உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8

Summary

Go to the source of thought, word and deed. Direct them to him, and merge yourself too.

திருவாய்மொழி.20

பாசுர எண்: 2810

பாசுரம்
ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9

Summary

When thus directed, all obstacies will vanish, Then wall for the moment of shedding the body.

திருவாய்மொழி.21

பாசுர எண்: 2811

பாசுரம்
எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10

Summary

Unite with the feet of the glorious Narayana, Lord of countless virtues.  Lord of incomparable good.

திருவாய்மொழி.22

பாசுர எண்: 2812

பாசுரம்
சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11

Summary

This decad of the thousand are the considered words bySatakapan Kurugur, surrounded by watere fields.

திருவாய்மொழி.23

பாசுர எண்: 2813

பாசுரம்
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. (2) 1.3.1

Summary

The Lord is easy to reach by devote through love.  His feet are hard to get for others, even Lotus-dame Lakshmi Oh, how easily he was caught and bound to the mortar, pleading, for stealing butter from the milkmaid’s churning pail.

திருவாய்மொழி.24

பாசுர எண்: 2814

பாசுரம்
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்,
தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. 1.3.2

Summary

Heedless of places and context, he appears in countless forms.  His radiant fullness is beginning less and endless. Forever providing the ambrosial experience of liberation, he exists with cool grace within and without.

திருவாய்மொழி.25

பாசுர எண்: 2815

பாசுரம்
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? 1.3.3

Summary

Who can comprehend the wonders of Narayana? He bears the highest good of Vedic sacrifice. Forever the creates, destroys, and plays between the two. He contains the gods, and the livin and the lifeless.

திருவாய்மொழி.26

பாசுர எண்: 2816

பாசுரம்
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4

Summary

My Lord is hard to see as the changeless one.  My Lord is easy to see as the changeless one.  My Lord bears a thousand names and forms.  My Lord is opposed to name and form, being and non-being.

Enter a number between 1 and 4000.