Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.567

பாசுர எண்: 3357

பாசுரம்
ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந் தாய்,உன் மாயங்கள்
மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?
வேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்கவல் லாய்.எம்மைநீ கழறேலே. 6.2.4

Summary

Then you swallowed the worlds and slept; your wonders even gods do not, -so how can we? –understand! You know how to graze your cows where Vel-eyed damsels play sand-castles, Then do not brother use, I Pray!

திருவாய்மொழி.568

பாசுர எண்: 3358

பாசுரம்
கழறேல் நம்பீ.உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும், திண்சக்கர
நீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான்,
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க,எம்
குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே. 6.2.5

Summary

O Sire, do not lie! Men and gods know your deceits. Lord of radiant discus, let me teach you something. Exuberant sweet-tongued damsels will always worship your grace. Pray do not play with our dumb mynahs and parrots.

திருவாய்மொழி.569

பாசுர எண்: 3359

பாசுரம்
குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ.உனக்கும் இளைதே கன்மமே. 6.2.6

Summary

No use pretending to repent, pray do not play with our dolls. We are familiar with these favours, we do not deserve them.  There are many fair damsels worthy of queen ship. Sire, do not ascend our fold, this is childishness, unbecoming of you.

திருவாய்மொழி.570

பாசுர எண்: 3360

பாசுரம்
கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞா முண்டிட்ட,
நின்மலா. நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே,
வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி அதுகேட்கில் என்னைமார்,
தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே. 6.2.7

Summary

O perfect Lord who took the Earth and Ocean, pray do not snatchour dolls, you tell us lies and play with us. A fault is a fault even by you, if my brothers hear of this one day, they will take the rod and spare you not for justice or for mercy.

திருவாய்மொழி.571

பாசுர எண்: 3361

பாசுரம்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே? 6.2.8

Summary

O Lord of radiant knowledge and countless glories, making all things so different, yet like one! when friends call and I go, you stop and dry us. Alas, what will the unfriendly ones not say?

திருவாய்மொழி.572

பாசுர எண்: 3362

பாசுரம்
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
      உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு
      சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே. 6.2.9

Summary

To melt our heart with love and trap us in your lotus-snare, you trod on the sand-castles we made and took the food we had laid out, you did not merely stand and watch, with you radiant smile.  Alas!  We are not fortunate.

திருவாய்மொழி.573

பாசுர எண்: 3363

பாசுரம்
நின்றிலங்கு முடியினாய். இருபத் தோர் கால்
      அரசு களை கட்ட,
வென்றி நீண்மழுவா. வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத்
      தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே. 6.2.10

Summary

O Lord of radiant crown, wielder of the axe that destroyed Kings! O Lord who made the Universe, O Lord of radiant hue!  Today you have come and uplifted the cowherd-clan.  Alas we cowherd-girls are pained!

திருவாய்மொழி.574

பாசுர எண்: 3364

பாசுரம்
ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய்
      வார்த்தையுள், சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,
ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு
      மோர்பத் திசையோடும்,
நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே. 6.2.11

Summary

This decad of the thousand songs sung with music by kurugur satakopan on the Lord who stole butter and was punished by the cowherd-mother, -those who mater it will be freed of poverty.

திருவாய்மொழி.575

பாசுர எண்: 3365

பாசுரம்
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே. 6.3.1

Summary

I see the Lord everywhere; he appears in many ways, as poverty and plenty, as heaven and hell, as bitter feud and friendship, a poison and medicine.  He is my master living with affluent people in Tiru-vinnagar.

திருவாய்மொழி.576

பாசுர எண்: 3366

பாசுரம்
கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே. 6.3.2

Summary

As pleasure and pain, as confusion and clear thought, as punishment and forgiveness, as light and shade, -the Lord my master is hard to understand, He resides in Tiru-vinnagar, surrounded by clear waters.

Enter a number between 1 and 4000.