Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.607

பாசுர எண்: 3397

பாசுரம்
சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும்
      தேவ பிரானையே,
தந்தை தாயென் றடைந்த வண்குரு
      கூர வர்சட கோபன்சொல்,
முந்தை யாயிரத் துள்ளி வைதொலை
      வில்லி மங்கலத் தைச்சொன்ன,
செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை
      செய் வார்திரு மாலுக்கே. 6.5.11

Summary

This decad of Tamil songs on the Lord of Tulaivilli-Mangalam, from the pure thousand by kurugur Satakopan, who attained the Lord a his father and mother in thought, word and deed, will secure a life of service to the Lord, for those can who sing it.

திருவாய்மொழி.608

பாசுர எண்: 3398

பாசுரம்
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்
ஏலக் குழலி யிழந்தது சங்கே. 6.6.1

Summary

My fair coiffured daughter has lost her bangles, -to the groom of beautiful red lotus eyes, who came as a manikin and measured the Earth the Lord of dark cloud hue.

திருவாய்மொழி.609

பாசுர எண்: 3399

பாசுரம்
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,
செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்
மங்கை யிழந்தது மாமை நிறமே. 6.6.2

Summary

My beautiful daughter has lost the pink in her cheeks, -to the conch-bow-dagger-mace-discus wielder, Lord of red lotus eyes and coral lips, who wears honey-dripping Tulasi flowers on his crown.

திருவாய்மொழி.610

பாசுர எண்: 3400

பாசுரம்
நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,
திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே. 6.6.3

Summary

My well-coiffured daughter has lost her grace, -to the dark-hued Lord, the trickster who swallowed the worlds with his small mouth, to the one who bears a spinning discus in hand.

திருவாய்மொழி.611

பாசுர எண்: 3401

பாசுரம்
பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு,
மாடுடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே. 6.6.4

Summary

My wide-hipped-daughter has lost her manners, -to the Lord who created the powerful Brahma, to the bachelor-groom who measured the wide Earth, to the one who went as a messenger for the ruling kings.

திருவாய்மொழி.612

பாசுர எண்: 3402

பாசுரம்
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,
மண்புரை வையம் இடந்த வராகற்கு,
தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்
கண்புனை கோதை இழந்தது கற்பே. 6.6.5

Summary

My well-coiffured daughter has lost her mind, -to the Lord who gave the good Vedas, to the one who came as a boar and lifted the Earth, to the Lord who sleeps on clear waters.

திருவாய்மொழி.613

பாசுர எண்: 3403

பாசுரம்
கற்பகக் காவன நற்பல தோளற்கு,
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே. 6.6.6

Summary

My tender daughter with bow-like eyebrows has lost her body, -to the Lord of Kalpa-tree-like arms, who wears a beautiful crown of radiant gold; his hands are like freshly blossomed lotuses.

திருவாய்மொழி.614

பாசுர எண்: 3404

பாசுரம்
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,
பையர வினணைப் பள்ளியி னானுக்கு,
கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே. 6.6.7

Summary

My fair daughter has lot her ornaments, -to the Lord who wears many good ornaments and reclines on a hooded couch, to Krishna, whose hands and feet are red.

திருவாய்மொழி.615

பாசுர எண்: 3405

பாசுரம்
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்
வாசக் குழலி இழந்தது மாண்பே. 6.6.8

Summary

My beautiful coiffured daughter raves, “Beautiful heaven is me.  The ugly hell too is me; the effulgent liberation is me; the beautiful souls are all me, the beautiful first-cause too is me”.  Has the cloud-hued Lord taken her?  O Beautiful people of the world, what can I say?

திருவாய்மொழி.616

பாசுர எண்: 3406

பாசுரம்
மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே. 6.6.9

Summary

My soft-breasted jewel-girl has lost her radiance, -to the Lord who came as beautiful groom, the Kakutsha Lord who looks a perfect hero, and rises tall like a dark radiant mountain.

Enter a number between 1 and 4000.