Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.727

பாசுர எண்: 3517

பாசுரம்
ஏற்றரும் வைகுந்தத் தையருளும்
      நமக்கு, ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
      மாயங்க ளேயியற்றி,
கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க்
      காயக்கொடுஞ் சேனைதடிந்து,
ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ்
      சோதிபுக் கஅரியே. 7.6.10

Summary

He took birth in the cowherd-clan, did many wondrous deeds, killed kamsa, befriended the Pandavas, and destroyed the armies, Full of patient goodness, he shall by his grace give us the precious ascent to Vaikunta, Haril.

திருவாய்மொழி.728

பாசுர எண்: 3518

பாசுரம்
புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே. (2) 7.6.11

திருவாய்மொழி.729

பாசுர எண்: 3519

பாசுரம்
ஏழையர் ஆவியுண் ணுமிணைக்
      கூற்றங்கொ லோவறியேன்,
ஆழியுங் கண்ண பிராந்திருக்
      கண்கள்கொ லோவறியேன்,
சூழவும் தாமரை நாண்மலர்
      போல்வந்து தோன்றும்கண்டீர்,
தோழியர் காள்.அன்னை மீர்.என்fசெய்
      கேந்துய ராட்டியேனே? (2) 7.7.1

Summary

Are they two sentinels of death, come to devour the souls of females, or are they the beautiful eyes of the ocean-hued Lord?, -I know not what they are. All around they appear, like day-fresh lotus flowers. Oh, see!  O Sinful me! Sakhis! Ladies!  What shall I do?

திருவாய்மொழி.730

பாசுர எண்: 3520

பாசுரம்
ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை
      மீரென்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
      யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு
      மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளக் கின்
      சுடரய்நிற்கும் வாலியதே. 7.7.2

Summary

O Ladies, what use punishing me with nudges and abuse? Is it a tendril or stem of a grown Kalpa creeper?, I know not, -the beautiful nose of the thief-Lord enters my soul, strongly like a radiant lamp hanging on a chain

திருவாய்மொழி.731

பாசுர எண்: 3521

பாசுரம்
வாலிய தோர்கனி கொல்வினை
      யாட்டியேன் வல்வினைகொல்,
கோலம் திரள்பவ ளக்கொழுந்
      துண்டங்கொ லோவறியேன்,
நீல நெடுமுகில் போல்திரு
      மேனியம் மான்தொண்டைவாய்,
ஏலும் திசையுளெல் லாம்வந்து
      தோன்றுமென் னின்னுயிர்க்கே. 7.7.3

Summary

Is it a beautiful berry fruit, -the sins of my wicked self?, -Or is it a coral spring of beauty, I know not, The radiant lips of my dark hued Lord appear me everywhere, sweetly to my soul

திருவாய்மொழி.732

பாசுர எண்: 3522

பாசுரம்
இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும்
      இணை நீலவிற்கொல்,
மன்னிய சீர்மத னங்கருப்புச்
      சிலை கொல்,மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான்
      புரு வமவையே,
என்னுயிர் மேலன வாய்
      அடுகின்றன என்று நின்றே. 7.7.4

Summary

Is it the dark sugarcane bow of the blessed Madana, god of love directed on sweet damsels?  The eyebrows of my Krishna, the father of Madana, appear everywhere and kill me, alas!

திருவாய்மொழி.733

பாசுர எண்: 3523

பாசுரம்
என்று நின்றேதிக ழும்செய்ய
      வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
அன்றியென் னாவி யடுமணி
      முத்தங்கொ லோவறியேன்,
குன்றம் எடுத்தபி ரான்
      முறுவலெனதாவியடும்,
ஒன்றும் அறிகின்றி லேனன்னை
      மீர்.எனக் குய்விடமே. 7.7.5

Summary

Is it a flash of lightning, raking a fire that burns my soul?  Or is it a beautiful string of pearls, I know not,  The radiant smile of my Lord who lifted the mount kills me.  Alas, Ladies! I know not where to escape

திருவாய்மொழி.734

பாசுர எண்: 3524

பாசுரம்
உய்விடம் ஏழையர்க் கும்
      அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங் கிமகரம்
      தழைக் கும்தளிர்கொல்,
பைவிடப் பாம்பணை யான்
      திருக்குண்டலக் காதுகளே?
கைவிட லொன்றுமின் றிய்
      அடுகின்றன காண்மின்களே. 7.7.6

Summary

Are they springs dangling with Makara fish?, -that make damsels and Asuras fear and ask, “Where?”, -O Ladies, See! The ornamented ears of the Lord who sleeps on a hooded snake kill me relentlessly

திருவாய்மொழி.735

பாசுர எண்: 3525

பாசுரம்
காண்மின்கள் அன்னையர் காள்.என்று
      காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்.
      நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள்
      பெருமான்தன் திருநுதலே?,
கோள்மன்னி யாவி யடும்கொடியேன்
      உயிர் கோளிழைத்தே. 7.7.7

Summary

Ladies, I know not how to show you this, but see! is it the waxing crescent moon? Alas, is there no poison for lovers?  The forehead of my Lord with four arms afflicts my soul and kills me relentlessly

திருவாய்மொழி.736

பாசுர எண்: 3526

பாசுரம்
கோளிழைத் தாமரையும்
      கொடியும் பவளமும் வில்லும்,
கோளிழைத்தண் முத்தமும்
      தளிரும் குளிர்வான் பிறையும்,
கோளிழையாவுடைய கொழுஞ்
      சோதி வட்டங்கொல், கண்ணன்,
கோளிழைவாள் முகமாய்க் கொடியேன்
      உயிர் கொள்கின்றதே? 7.7.8

Summary

The beautiful face of Krishna has taken my soul! His lotus eyes, tendril nose, coral lips, bow-like eyebrows, pearly teeth, ornamented ears and crescent-marked forehead stand like a radiant orb of brilliance

Enter a number between 1 and 4000.