Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.767

பாசுர எண்: 3557

பாசுரம்
ஒன்றும்நில் லாகெடும் முற்றவும்
      தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பிணி
      நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம்
      துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான்,
நின்ற அணிதிரு வாறன்
      விளையென்னும் நீணக ரமதுவே. 7.10.6

Summary

Devotees if we contemplate his frame, our karmas will vanish.  He is within me at all times, praised by my heart.  He then fought and won battles to wed his Rukmini.  He resides in Tiruvaranvilai, the city of great fame

திருவாய்மொழி.768

பாசுர எண்: 3558

பாசுரம்
நீணக ரமது வேமலர்ச்
      சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி
      ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக்கட்பி
      ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித்
      தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. 7.10.7

Summary

The city of Tiruvaranvilal is surrounded by gardens.  He resides there as Krishna, Lord of the celestials, in the yore he entered Sana’s fortress, -while Siva fled, -and cut asunder the Asura’s thousand arms, he is our only refuge

திருவாய்மொழி.769

பாசுர எண்: 3559

பாசுரம்
அன்றிமற் றொன்றிலம் நின்சர
      ணே. என் றகலிரும் பொய்கையின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய
      ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,
சென்றங் கினிதுறை கின்ற
      செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?
      தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8

Summary

The tusker standing in deep waters lifted his trunk and walled, “O Krishna, I have no refuge, other than you!” The Lord ended his misery then; he lives in Tiruvaranvilai, If we go around him in worship, our karmas will all vanish

திருவாய்மொழி.770

பாசுர எண்: 3560

பாசுரம்
தீவினை யுள்ளத்தின் சார்வல்ல
      வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும்
      அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
யாவரும் வந்து வணங்கும்
      பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக்
      கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. 7.10.9

Summary

Even if my karmas vanish and I ascend Heaven, my thoughts will still be, “When will I praise and worship him?”. With proper deeds and proper heart and proper words alone, O When will I go around Tiruvaranvilai

திருவாய்மொழி.771

பாசுர எண்: 3561

பாசுரம்
சிந்தைமற் றொன்றின் திறத்ததல்
      லாத்தன்மை தேவபி ரானறியும்,
சிந்தையி னால்செய்வ தானறி
      யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை
      யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
சிந்தை மகிழ்திரு வாறன்
      விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே. 7.10.10

Summary

I Have resigned myself to the Lord who lives in Tiruvaranvilai, where devotees worship him through thougnt, world and deed.  The Lord Tevarpiran knows my heart to the core.  He knows that I nurture no secret desires

திருவாய்மொழி.772

பாசுர எண்: 3562

பாசுரம்
தீர்த்தனுக் கற்றபின் மற்றோர்
      சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச்
      செழுங்குரு கூர்ச்சட கோபன்fசொன்ன,
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை
      பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து
      நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. (2) 7.10.11

Summary

This decad of the holly thousand songs by kurugur Satakopan of Saintly heart, on dedicating himself to the holy one’s feet, – those who master it will secure the worship of the celestials and their spouses

திருவாய்மொழி.773

பாசுர எண்: 3563

பாசுரம்
தேவிமா ராவார் திருமகள் பூமி
      யேவமற் றமரராட் செய்வார்,
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
      வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக்
      கண்ணதோர் பவளவாய் மணியே,
ஆவியே. அமுதே. அலைகடல் கடைந்த
      அப்பனே. காணுமா றருளாய். 8.1.1

Summary

Your spouses Sri and Bhu command, and all the celestials serve; the blessed three worlds are your domain, the forms you will are yours.  O Gem-Lord with lotus eyes and coral lips that haunt me!  O My soul’s ambrosia! Lord who churned the ocean! Bless me with your vision

திருவாய்மொழி.774

பாசுர எண்: 3564

பாசுரம்
காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக்
      கண்ணநீர் அலமர வினையேன்
பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே
      பிதற்றுமா றருளெனக் கந்தோ,
காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா.
      தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ்
      பெருநிலம் எடுத்தபே ராளா. 8.1.2

Summary

My only wish is to see you, tears flood my eyes, alas! Make me love you in every way, and prate your names, Show yourself to me.  O Lord, Rama, Krishna, kalpa-fruit! O Lord who lifted the Earth from the waters, you are the ambrosia for devotees

திருவாய்மொழி.775

பாசுர எண்: 3565

பாசுரம்
எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன்
      இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்
கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே.
      அடியனேன் பெரியவம் மானே,
கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக்
      கையுகி ராண்டவெங் கடலே,
அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய்
      எங்ஙனம் தேறுவர் உமரே? 8.1.3

Summary

O Sweet child, dear as life to chieftain Nandagopal O Chubby elephant-calf, Yosada’s joy, deep as the ocean!  You tore apart the wide chest of the wicked Hiranya with your claws!  Come again in your nerot form, or else, how will devotees live?

திருவாய்மொழி.776

பாசுர எண்: 3566

பாசுரம்
உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்
      ஆகியுன் தனக்கன்ப ரானார்
அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை
      அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
அமரது பண்ணி அகலிடம் புடைசூழ்
      அடுபடை அவித்தாம் மானே,
அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே.
      என்னுடை ஆருயி ரேயோ. 8.1.4

Summary

O Lord who unleashed a terrible army on Earth in the war! O celestials’ ambrosia, poison to the Asuras, dear to my soul! Then I too may doubt that you appear before devotees, -in forms that they worship, -and accept their offerings

Enter a number between 1 and 4000.