நம்மாழ்வார்
திருவாய்மொழி.787
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3577
பாசுரம்
கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற் றொழிய இழந்து வைகல்
பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை
வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர்
ஆழி வலவினை யாதரித்தே. 8.2.4
Summary
O Sakhis! the wonder-dancer Mayakkuttan lives westwards in Southern Kulandai amid groves and mansions. The deft spinner of the war discus rode away on his dancing Garuda-mount, Filled with desire, I followed; my bangles fell, my heart and all left me. I stand shamed before bangled friends, now hat can I lose?
திருவாய்மொழி.788
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3578
பாசுரம்
ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன்
நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள்.நம் முடைய மேதான்?
சொல்லுவ தோவிங் கரியதுதான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக
நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித்
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே. 8.2.5
Summary
O Sakhis! The Lord has an effulgence that traps all like moth-unto-the-candle. Through countless ages, great seers have thought of him and failed. Are we the first to desire the discus wielder and make him come into our midst? Tell me, are your words proper now?
திருவாய்மொழி.789
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3579
பாசுரம்
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென்
சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,
எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான்
ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ்கு டந்தை
மாமலர்க் கண்வளர் கின்ற மாலே. 8.2.6
Summary
O Sakhis! The radiant Lord beyond words, is hard to attain even for the celestials, Be that as it may, he stole my hue, and denied me his pollen-laden Tulasi. Alas, to whom can I address my grievances now? He sleeps with large lotus eyes in kudandai amid fertile groves
திருவாய்மொழி.790
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3580
பாசுரம்
மாலரி கேசவன் நார ணஞ்சீ
மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று,
ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட்
டொன்று முருவும் சுவடும் காட்டான்,
ஏல மலர்குழல் அன்னை மீர்காள்.
என்னுடைத் தோழியர் காள்.என் செய்கேன்?
காலம் பலசென்றும் காண்ப தாணை
உங்களோ டெங்க ளிடையில் லையே. 8.2.7
Summary
O Flower-coiffured Ladies, my fair Sakhis! He has deserted me disappeared without a trace, making me prate, “Mal, Hari, Kesava, Narayana, Sri Madhava, Govinda, Vaikunta” and many such names, what can I do? Though many years may pass, I swear I will see him. You may take it that you and I have nothing in common hence-forth!
திருவாய்மொழி.791
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3581
பாசுரம்
இடையில் லையான் வளர்த்த கிளிகாள்.
பூவைகள் காள்.குயில் காள்.ம யில்காள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்பாற் கடலும்
அஞ்சன வெற்பும் அவைந ணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை
அன்றி யவனவை காண்கொ டானே. 8.2.8
Summary
Out, out, my pet Mynahs, Parrots, my koels and my peacocks! He has stolen my health, wealth, heart and all else to the last bit. He resides in fair Vaikunta, in Milk Ocean and on Venkatam hill. Till my last remaining passions leave me, he will not see me, so get out!
திருவாய்மொழி.792
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3582
பாசுரம்
காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக்
கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த
தேவ பிராற்கென் நிரைவினோடு,
நாண்கொடுத் தேனினி யென்கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். 8.2.9
Summary
O Sakhis! The Lord of celestials is hot the one to show himself easily. He came as a sweet lad, then grew and took the Earth, sky and all. He has beautiful arms of exceeding radiance and mischief, I have lost my dignity and my shame to him. So what can I lose now?
திருவாய்மொழி.793
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3583
பாசுரம்
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு
பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான்
நாண்fம லர்ப்பா தமடைந் ததுவே. 8.2.10
Summary
O My fair-bangled Sakhis! My heart left me saying, “Not thine anymore”, and joined the lotus feet of the Lord. Who came walking like a huge dark mountain with the radiant Sun-like discus and Moon-white conch in hands, Now what can I do?
திருவாய்மொழி.794
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3584
பாசுரம்
பாதம் அடைவதன் பாசத் தாலே
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,
கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல்
வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
தீதிலந்தாதியோ ராயி ரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,
ஆதுமோர் தீதில ராகி யிங்கும்
அங்குமெல் லாமமை வார்கள் தாமே. (2) 8.2.11
Summary
The faultless decad from the Andadi of thousand songs by kurugur Satakopan who gave up all his passions for securing Krishna’s feet, -those can sing this to the glorious Krishna Lord will become faultless and attain everything on Earth and in Heaven
திருவாய்மொழி.795
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3585
பாசுரம்
அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே. (2) 8.3.1
Summary
O Lord bearing a conch and discus, with Lotus, Dame, Earth Dame and Nappinnai blending in you! Gods and Asuras everywhere worship you and seek refuge in you, but fall to fathom you
திருவாய்மொழி.796
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3586
பாசுரம்
சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,
அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே. 8.3.2
Summary
Without ever learning the sacred Vedic Chants, we have cut attachments and destroyed the woes of birth, death, old age and disease, by simply serving the radiant discus-Lord who is our fortress of strength