Responsive image

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு.11

பாசுர எண்: 11

பாசுரம்
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே.        11.

Summary

The Lord took birth to destroy the clan of kings led by Duryodhana, who wanted to rule the Earth by themselves, without sharing their bounteous wealth with their brothers, the Pandavas.  He will embrace me from behind, the prize-bull of the cowherd clan will embrace me from behind.

திருப்பல்லாண்டு.12

பாசுர எண்: 12

பாசுரம்
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே.        12.

Summary

The cowherd-lad entered the hot waters, climbed on to a Kadamba tree, leapt over the hoods of the venomous snake Kaliya, and danced as his anklets jingled merrily; playing his bamboo flute he stood like a wonder.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

பெரியாழ்வார் திருமொழி.1

பாசுரம்
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே.         1.

Summary

When the Lord Sri Krishna Kesava was born in Tirukkottiyur of beautiful mansions they spilled oil and turmeric powder on one another, slushing the portico of Krishna’s house.

பெரியாழ்வார் திருமொழி.2

பாசுரம்
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே       . 2.

Summary

They ran and fell, then rose and greeted joyously, asking, “where is our Lord?” Singers, dancers and drummers everywhere thronged the cowherds’ hamlet.

பெரியாழ்வார் திருமொழி.3

பாசுரம்
பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே.        3.

Summary

Soon after the protected child was born they poured into the nursery to see him, and came out saying, “He has no match!”,”He shall rule the Earth!”, “Tiruvonam is his star!”.

பெரியாழ்வார் திருமொழி.4

பாசுரம்
உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே.        4.

Summary

The cowherd -folk poured out good milk, curds and Ghee from rope-shelf, overturned the empty post in the portico and danced on them tossing their disheveled hair, and lost their minds.

பெரியாழ்வார் திருமொழி.5

பாசுரம்
கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.        5.

Summary

Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screw pine fibre; they smeared themselves with Ghee and danced.

பெரியாழ்வார் திருமொழி.6

பாசுரம்
கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.        6.

Summary

She washed her child in a bathtub gently stretching his arms and legs.  Then she opened his mouth and clean the tongue with a piece of tender turmeric, and saw the seven worlds in his gaping mouth.

பெரியாழ்வார் திருமொழி.7

பாசுரம்
வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.        7.

Summary

When the other good ladies saw the Universe in his mouth, they exclaimed with glee, “this is no ordinary cowherd-child, but the blessed Lord himself, endowed with all the auspicious qualities”.

பெரியாழ்வார் திருமொழி.8

பாசுரம்
பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.        8.

Summary

After ten days and two the cowherds erected festooned pillars on all four sides then lifted the child from the cradle, singing, “The-prince-who-lifted-the-wild elephants-mountain-against-a-hailstorm!”

Enter a number between 1 and 4000.