பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.1001
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1948
பாசுரம்
காமற் கென்கடவேன்,
கருமாமுகில் வண்ணற்கல்லால்,
பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக்,
காமற் கென்கடவேன். 10.10.7
Summary
What can I give kama? Other than serving the dark hued Lord, the Father of sugarcane-bow-wielder, what can I give kama?
பெரிய திருமொழி.1002
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1949
பாசுரம்
இங்கே போதுங்கொலோ,
இனவேல்நெடுங் கண்களிப்ப,
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால்,
இங்கே போதுங்கொலோ. 10.10.8
Summary
Will he come this way? Pleasing my dark and vel-like two eyes, kudandai Lord amid nectored groves, -will he come this way?
பெரிய திருமொழி.1003
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1950
பாசுரம்
இன்னா ரென்றறியேன்,
அன்னே. ஆழியொடும்,
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,
இன்னா ரென்றறியேன். 10.10.9
Summary
I know not his looks. Lord who wields a discus. Conchand sarnga bow in his big hands –I know not his looks.
பெரிய திருமொழி.1004
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1951
பாசுரம்
தொண்டீர். பாடுமினோ,
சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன்,
ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள்,
தொண்டீர். பாடுமினோ (2) 10.10.10
Summary
Devotees! Sing these songs.-Bee-humming fragrant groves of Mangai;s king kalikanri, spear wielder;s –Devotees! Sing these songs.
பெரிய திருமொழி.1005
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1952
பாசுரம்
குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை
அன்று காத்தவம் மான்,அ ரக்கரை
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன். (2) 11.1.1
Summary
The Lord lifted a mountain and stopped the rains. He is the bow-wielder who destroyed the Rakshasas. Alas! The breeze fans my love fire. Is this any sign of his valour? I do not know!
பெரிய திருமொழி.1006
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1953
பாசுரம்
காரும் வார்பனிக் கடலும் அன்னவன்,
தாரு மார்வமும் கண்ட தண்டமோ,
சோரு மாமுகில் துளியி னூடுவந்து
ஈர வாடைதான் ஈரு மென்னையே. 11.1.2
Summary
The Lord is dark as the rain cloud, and the deep ocean. I desired his Tulasi-garland-chest. Is this the punishment? –the breeze laden with the cool dew of rainclouds blows to pierce my soul!
பெரிய திருமொழி.1007
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1954
பாசுரம்
சங்கு மாமையும் தளரு மேனிமேல்,
திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,
கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே. 11.1.3
Summary
My bangles have slipped, my colour has drained. The rays of the Moon singe me angrily, what can I do? The Lord of dark ocean hue wears a fragrant Tulasi garland which keeps calling to me!
பெரிய திருமொழி.1008
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1955
பாசுரம்
அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று,
அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,
கொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ,
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே 11.1.4
Summary
He is one who entered another household and grew up there. He sucked the poison breast of an ogress who came as a mother. Aho, the impropriety! The rays of the Moon sizzle me!
பெரிய திருமொழி.1009
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1956
பாசுரம்
அங்கொ ராளரி யாய்,அ வுணனைப்
பங்க மாவிரு கூறு செய்தவன்,
மங்குல் மாமதி வாங்க வேகொலோ
பொங்கு மாகடல் புலம்பு கின்றதே. 11.1.5
Summary
Once he came as a man-lion, and fore apart the chest of Hiranya. Is it because the tender Moon has escaped into the sky that the ocean sends out a rending roar?
பெரிய திருமொழி.1010
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1957
பாசுரம்
சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,
அன்றி லின்குரல் அடரு மென்னையே. 11.1.6
Summary
The Lord wielded his bow and vanquished the city of Lanka, Is it to speak of his valour now, that the Anril birds pairing in a nest of lotus twings, high on the Palm tree in the front yard, coil incessantly and hurt me?