பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.451
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1398
பாசுரம்
கைம்மான மழகளிற்றைக்
கடல்fகிடந்த கருமணியை,
மைம்மான மரகதத்தை
மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று
மினியானைப் பனிகாத்த
வம்மானை, யான்கண்ட
தணிநீர்த் தென் னரங்கத்தே (5.6.1)
பெரிய திருமொழி.452
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1399
பாசுரம்
பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர்
உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும்
மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.2)
பெரிய திருமொழி.453
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1400
பாசுரம்
ஏனாகி யுலகிடந்தன்
றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத்
தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித்
திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.3)
பெரிய திருமொழி.454
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1401
பாசுரம்
வளர்ந்தவனைத் தடங்கடலுள்
வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத்
தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ
ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.4)
பெரிய திருமொழி.455
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1402
பாசுரம்
நீரழலாய் நெடுநிலனாய்
நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக்
கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப்
பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.5)
பெரிய திருமொழி.456
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1403
பாசுரம்
தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார்
தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக
முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்
விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.6)
பெரிய திருமொழி.457
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1404
பாசுரம்
சிந்தனையைத் தவநெறியைத்
திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த
வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ
லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.7)
பெரிய திருமொழி.458
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1405
பாசுரம்
துவரித்த வுடையார்க்கும்
தூய்மையில்லச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா
அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு
மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.8)
பெரிய திருமொழி.459
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1406
பாசுரம்
பொய்வண்ணம் மனத்தகற்றிப்
புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு
மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல்
திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான்
கண்டதுதென் னரங்கத்தே (5.6 .9)
பெரிய திருமொழி.460
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1407
பாசுரம்
ஆமருவி நிரைமேய்த்த
அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி
யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை
நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல்
சாராதீ வினைதாமே (5.6.10)