Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.511

பாசுர எண்: 1458

பாசுரம்
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு
ளின்ப மெனவிரண்டும்
இறுத்தேன், ஐம்புலன் கட்கட
னாயின வாயிலொட்டி
அறுத்தேன், ஆர்வச்செற் றமவை
தன்னை மனத்தகற்றி
வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.1)

பெரிய திருமொழி.512

பாசுர எண்: 1459

பாசுரம்
மறந்தே னுன்னைமுன்னம fமறந்
தமதி யின்மனத்தால்,
இறந்தே னெத்த னையுமத
னாலிடும் பைக்குழியில்
பிறந்தே யெய்த்தொழிந்
தேன்பெ ருமானே திருமார்பா
சிறந்தேன் நின்னடிக் கேதிரு
விண்ணகர் மேயவனே (6.2.2)

பெரிய திருமொழி.513

பாசுர எண்: 1460

பாசுரம்
மானெய் நோக்கியர் தம்வயிற்
றுக்குழி யிலுழைக்கும்,
ஊனேராக்கை தன்னை உ<த
வாமை யுணர்ந்துணர்ந்து,
வானே மானில மே வந்து
வந்தென் மனத்திருந்த
தேனே, நின்னடைந் தேன்திரு
விண்ண்ணகர் மேயவனே (6.2.3)

பெரிய திருமொழி.514

பாசுர எண்: 1461

பாசுரம்
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி
ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு
ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர்
தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு
விண்ணகர் மேயவனே (6.2.4)

பெரிய திருமொழி.515

பாசுர எண்: 1462

பாசுரம்
பாண்டேன் வண்டறை யும்குழ
லார்கள்பல் லாண்டிசைப்ப,
ஆண்டார் வையமெல் லாம் அர
சாகி, முன்னாண்டவரே
மாண்டா ரென்றுவந் தார்அந்
தோமனை வாழ்க்கைதன்னை
வேண்டேன், நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.5)

பெரிய திருமொழி.516

பாசுர எண்: 1463

பாசுரம்
கல்லா வைம்புலன் களவை
கண்டவா செய்யகில்லேன்,
மல்லா, மல்லம ருள்மல்
லர்மாள மல்லடர்த்த
மல்லா, மல்லலம் சீர்மதிள்
நீரிலங் கையழித்த
வில்லா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.6)

பெரிய திருமொழி.517

பாசுர எண்: 1464

பாசுரம்
வேறா யானிரந் தேன்வெகு
ளாது மனக்கொளந்தாய்,
ஆறா வெந்நர கத்தடி
யேனை யிடக்கருதி,
கூறா ஐவர்வந் துகுமைக்
கக்குடி விட்டவரை,
தேறா துன்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.7)

பெரிய திருமொழி.518

பாசுர எண்: 1465

பாசுரம்
தீவாய் வல்வினை யாருட
னின்று சிறந்தவர்போல்,
மேவா வெந்நர கத்திட
உற்று விரைந்துவந்தார்,
மூவா வானவர் தம்முதல்
வா மதி கோள்விடுத்த
தேவா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.8)

பெரிய திருமொழி.519

பாசுர எண்: 1466

பாசுரம்
போதார் தாமரை யாள்புல
விக்குல வானவர்தம்
கோதா, கோதில்செங் கோல்குடை
மன்ன ரிடைநடந்த
தூதா, தூமொழி யாய்.சுடர்
போலென் மனத்திருந்த
வேதா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.9)

பெரிய திருமொழி.520

பாசுர எண்: 1467

பாசுரம்
தேனார் பூம்புற வில்திரு
விண்ணகர் மேயவனை,
வானா ரும்மதில் சூழ்வயல்
மங்கையர் கோன், மருவார்
ஊனார் வேல்கலி யனொலி
செய்தமிழ் மாலைவல்லார்,
கோனாய் வானவர் தம்கொடி
மாநகர் கூடுவரே (6.2.10)

Enter a number between 1 and 4000.