Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.711

பாசுர எண்: 1658

பாசுரம்
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள்
கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? (2) 8.2.1

பெரிய திருமொழி.712

பாசுர எண்: 1659

பாசுரம்
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,
பாணனார் திண்ண மிருக்க இனியிவள்
நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. 8.2.2

பெரிய திருமொழி.713

பாசுர எண்: 1660

பாசுரம்
அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,
பெருகுசீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள், உள்மெலிந் தாள் இது வென்கொலோ. (2) 8.2.3

பெரிய திருமொழி.714

பாசுர எண்: 1661

பாசுரம்
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,
பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,
கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்
வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ. 8.2.4

பெரிய திருமொழி.715

பாசுர எண்: 1662

பாசுரம்
கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை,
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்,
வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள்,
வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே. 8.2.5

பெரிய திருமொழி.716

பாசுர எண்: 1663

பாசுரம்
வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம்,
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்,
மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்
கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே. 8.2.6

பெரிய திருமொழி.717

பாசுர எண்: 1664

பாசுரம்
தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,
இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள்
துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர்
அரங்கமே என்ப திவள்தனக் காசையே. 8.2.7

பெரிய திருமொழி.718

பாசுர எண்: 1665

பாசுரம்
தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா
கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்
வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்
கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே? 8.2.8

பெரிய திருமொழி.719

பாசுர எண்: 1666

பாசுரம்
முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா,
தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன்,
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே? 8.2.9

பெரிய திருமொழி.720

பாசுர எண்: 1667

பாசுரம்
கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,
பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,
சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,
நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே. (2) 8.2.10

Enter a number between 1 and 4000.