Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.721

பாசுர எண்: 1668

பாசுரம்
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,
திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர
வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. (2) 8.3.1

பெரிய திருமொழி.722

பாசுர எண்: 1669

பாசுரம்
அரிவிரவு முகிற்fகணத்தா னகில்புகையால் வரையோடும்
தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,
வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,
கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே. 8.3.2

பெரிய திருமொழி.723

பாசுர எண்: 1670

பாசுரம்
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்
திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்
பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த
செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.3

பெரிய திருமொழி.724

பாசுர எண்: 1671

பாசுரம்
கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,
திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்
புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனெ ன் பொன்வளையே. 8.3.4

பெரிய திருமொழி.725

பாசுர எண்: 1672

பாசுரம்
வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்
தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்
தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,
வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே. 8.3.5

பெரிய திருமொழி.726

பாசுர எண்: 1673

பாசுரம்
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,
அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,
உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.6

பெரிய திருமொழி.727

பாசுர எண்: 1674

பாசுரம்
வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,
எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,
உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.7

பெரிய திருமொழி.728

பாசுர எண்: 1675

பாசுரம்
கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,
வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,
செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.8

பெரிய திருமொழி.729

பாசுர எண்: 1676

பாசுரம்
வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,
சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,
பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்
பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே. 8.3.9

பெரிய திருமொழி.730

பாசுர எண்: 1677

பாசுரம்
தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்
வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே. (2) 8.3.10

Enter a number between 1 and 4000.