பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.891
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1838
பாசுரம்
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு
நாயகன், ஏத் தடியவர்
தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,
பொங்குதண் ணருவி புதம்செய்யப்
பொன்களே சிதறு மிலங்கொளி,
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. (2)9.10.1
Summary
Our own dear Lord and Master is the Lord of gods, forever residing with grace in the hearts of those who worship him. He is the Lord of Tirukkottiyur where clouds rain streams of gold. Lighting up the place and making lotus buds blossom
பெரிய திருமொழி.892
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1839
பாசுரம்
எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை
இன்னகைத் துவர்வாய், நிலமகள்
செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை
மாலையொடு மணந்து, மாருதம்
தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.9.10.2
Summary
Our Lord rids us of the miseries of sickness. He enjoys the smile of red-lipped Dame Earth, and is ever-sweet to the lady of the lotus Lakshmi. The breeze blowing over his bee-humming garlands of Jasmine and Jaji spreads a heavenly fragrance in Tirukkottiyur
பெரிய திருமொழி.893
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1840
பாசுரம்
வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன்
விண்ணவர் தமக்கிறை, எமக்கு
ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான்,
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக்
கற்றைச் சந்தன முந்தி வந்தசை,
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே.9.10.3
Summary
The spotless one, the dark one, the gem-hued one, the Lord of celestials, the transcendent Lord, reveals himself to us. He swallowed the seven worlds and brought them out, He resides in Tirukkottiyur where streams in groves bring Sandal-wood and whisk-hair in heaps
பெரிய திருமொழி.894
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1841
பாசுரம்
ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும்
ஈசற் கிசைந்து, உடம்பிலோர்
கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான்,
நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி
இன்னிள வண்டு, நன்னறுந்
தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே.9.10.4
Summary
To the axe-wielding bull-riding siva, the Lord obligingly gave a place on his person, as also to the lady of the lotus Lakshmi, He resides in Tirukkottiyur where beautiful, youthful bees hover over fragrant senbakam and Jasmine flowers, then sip aroma-nectar and dance
பெரிய திருமொழி.895
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1842
பாசுரம்
வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன்
விண்ணவர் கோன்ம துமலர்த்
தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான்,
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி
மாக மீதுயர்ந் தேறி, வானுயர்
திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே.9.10.5
Summary
The Lord deep ocean hue, the Lord of dark gem hue, the Lord of celestials, the Lord of nectored Tulasi garland, the ancient Lord who measured the Earth, resides in Tirukkottiyur amid mansions that the high and touch the clouds, while the white pennons on top play with the Moon in the heavenly sky
பெரிய திருமொழி.896
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1843
பாசுரம்
காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம்
செலவுய்த்து, மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,
நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க
மாலுறை கின்றதிங்கென,
தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே.9.10.6
Summary
My Lord and master, the adorable Mal, fired arrows on Lanka;s king Ravana and ended his fyranny. All the kings of Jambu Dvipa gather in Tirukkottiyur and say, “The Lord resides here!” then bow and worship, while the celestials come and offer praise
பெரிய திருமொழி.897
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1844
பாசுரம்
கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக்
கழிவென்று, மாமழை
நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை
மணமும் அளைந்து,இளந்
தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே.9.10.7
Summary
The sweet Lord of Dame Earth came in the yore as Krishna, swirled the Asuric calf against a wood-apple tree, then held a mountain against rains to protect the cows. He resides in Tirukkottiyur where the cool breeze blows over mountain Mullai and cool Jasmine flowers, wafting their fragrance everywhere
பெரிய திருமொழி.898
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1845
பாசுரம்
பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து,
அடியேனை யாளுகந்து
ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான்,
தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின்
கனியொடு மாங்கனி
தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே. 9.10.8
Summary
The Lord of celestials who made me his servant and entered into me, came in the yore as krishna and broke two marudu trees, killed on elephant, and ripped a horse;s jows. He resides in Tirukkottiyur where Mango, Jackfruti and banana fruit in plenty, in orchards with cool streams
பெரிய திருமொழி.899
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1846
பாசுரம்
கோவை யின்தமிழ் பாடு வார்குடம்
ஆடு வார்தட மாமலர்மிசை,
மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர்,
மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி
ஆறங்கம் வல்லவர் தொழும்,
தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே. 9.10.9
Summary
The Lord is sought after by sweet Tamil boards, pot-dancers and Vedic seers whose thread is brighter the lotus-born Brahama;s He is Devadevapiran, the Lord of gods, worshipped by seers adept in the four Vedas, the fire sacrifies and the six Angas in Tirukkottiyur
பெரிய திருமொழி.900
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1847
பாசுரம்
ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர்
தலைவன் அணிபொழில்
சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை,
நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை
இன்தமி ழால்நி னைந்த,இந்
நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே. (2) 9.10.10
Summary
This is a garland of sweet Tamil songs for the dark gem-hued Lord, resident of fish-dancing-streams-and-groves-Tiruk-kottiyur, by Mangai king Kalikanri, deft horse rider. Those who master it will enter the world of celestials