பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.901
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1848
பாசுரம்
ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்
வருநல் தொல்கதி யாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்
கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே (2) 10.1.1
Summary
My Lord and prince, my best friend, my very life and purpose, my forthcoming eternal home -we had Darshan of his feet in Nirmalai yesterday, Today we shall go and have his Darshan in Kannamangai surrounded by ripe paddy fields
பெரிய திருமொழி.902
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1849
பாசுரம்
பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே 10.1.2
Summary
My gold, my gem, my beautiful lightning, my Lord and Master, -we hade his Darshan in Venkatam; today we shall go and have his Darshan in Tiruttanka
பெரிய திருமொழி.903
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1850
பாசுரம்
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே 10.1.3
Summary
The Lord who slept as a child in the ocean floating on flag leaf, my precious ambrosia. I the cool Tulasi-garland-Lord – we enjoyed him Darshan in Tiruvall; today we shall go and have his Darshan in the wold-renowned Tirunangur
பெரிய திருமொழி.904
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1851
பாசுரம்
துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4
Summary
The light-eternal, my prince who tore into Hiranya;s chest, my ambrosia, light of the celestials, the abundant grace, -having worshipped him in Tirupper, we shall go and have thid Darshan in Tiruvellarai today
பெரிய திருமொழி.905
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1852
பாசுரம்
சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்
நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்
உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்
விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே 10.1.5
Summary
The Lord who ended the misery of Siva, -wearer of the ash from cremation grounds, -gave us Darshan in Tirunaraiyur. Deftly entering into my person, he melts and drinks my heart. Today we shall go and have his Darshan in Tirumeyyam
பெரிய திருமொழி.906
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1853
பாசுரம்
வானை ஆரமு தம்தந்த வள்ளலை
தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்
ஆை ன வாட்டி யருளும் அமரர்த்தம்
கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே 10.1.6
Summary
The benevolent Lord who have ambrosia to the gods. the nectar of devotees, gave us Darshan in Tiruccherai amid fertile fields. He is the Lord of gods, the Lord who killed the elephant easily. Today we shall go and have hid Darshan in Tirukkudandal
பெரிய திருமொழி.907
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1854
பாசுரம்
கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய்
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே 10.1.7
Summary
The Lord who came as Gopala, pleasing to the coiffured Gopis, and gulped buffer, gave his Darshan in Tiruvalundur. Today we shall go and have his Darshan in Tiruvehka, where he reclines on a serpent-bed
பெரிய திருமொழி.908
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1855
பாசுரம்
பத்த ராவியைப் பான்மதி யை,அணித்
தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்
முத்தி னைமணி யைமணி மாணிக்க
வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே 10.1.8
Summary
We worshipped the Lord, -devotees life-breath, cool as the milky Moon beautiful as a gem-set garland, in Tirumalirumsolai, Today we shall go and have his Darshan, -precious as pearls, gems and emeralds, -in Tiruvinnagar
பெரிய திருமொழி.909
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1856
பாசுரம்
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே 10.1.9
Summary
The Lord who plucked the tusk of a rutted elephant and killed him with his tinking-anklet-dancing-feet gave us Darshan in Tirukkottiyur surrounded by flowery groves. Today we shall go and have his Darshan of our Lord in Tirunavai
பெரிய திருமொழி.910
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1857
பாசுரம்
பெற்றம் ஆளியை பேரில் மணாளனை
கற்ற _ல்கலி கன்றி யுரைசெய்த
சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே 10.1.10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Summary
This is a garland of songs in praise for the bridegroom of Tirupper, the Lord who grazed cows, sung by the well-learned Kalikanri. Those who master it will have no despair, they shall rule the skies as well