Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.921

பாசுர எண்: 1868

பாசுரம்
ஏத்து கின்றோம் நாத்த
ழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ. சுக்கி
ரீவா. உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை
யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.1

Summary

O Lord Sugriva, we salute you, Hail! we praise the name of Rama till our tongues swell, Pray tell your monkey clan not to kill us! Like entertainers, we dance the kulamani Duram

பெரிய திருமொழி.922

பாசுர எண்: 1869

பாசுரம்
எம்பி ரானே. என்னை
யாள்வாய் என்றென் றலற்றாதே
அம்பின் வாய்ப்பட் டாற்ற
கில்லா திந்திர சித்தழிந்தான்
நம்பி அனுமா. சுக்கி
ரீவ. அங்கத னே.நளனே
கும்ப கர்ணன் பட்டுப்
போனான் குழமணி தூரமே 10.3.2

Summary

Alas, Indrajit did not submit and say, “My Lord, my Master”, and was killed by an arrow inescapably. O Lord Hanuman! Sugriva! Angada! Nalal Even kumbhakarna is follen, we dance the kulamani Duram

பெரிய திருமொழி.923

பாசுர எண்: 1870

பாசுரம்
ஞால மாளு முங்கள்
கோமான் எங்கள் இரவணற்குக்
கால னாகி வந்த
வாகண் டஞ்சிக் கருமுகில்போல்
நீலன் வாழ்கசு டேணன்
வாழ்க அங்கதன் வாழ்கவென்று
கோல மாக ஆடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.3

Summary

The world ruler your king became the Lord of death for our king Ravana, Long live your Nila, Long! live your sushenan, Long live your! Angadan. We fear them and we dance the kulamani Duram

பெரிய திருமொழி.924

பாசுர எண்: 1871

பாசுரம்
மணங்கள் நாறும் வார்குழ
லார்கள் மாதர்க ளாதரத்தை
புணர்ந்த ச ிந்தைப் புன்மை
யாளன் பொன்ற வரிசிலையால்
கணங்க ளுண்ண வாளி
யாண்ட காவல னுக்கிளையோன்
குணங்கள் பாடி யாடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.4

Summary

Our lowly king Ravana, obsessed with throughts of company with fragrant-coiffured dames was fed to the elements by the great bow-wielder Rama;s arrows.  We sing his younger brother Lakshmanai;s praise, we dance the Kulamani Duram

பெரிய திருமொழி.925

பாசுர எண்: 1872

பாசுரம்
வென்றி தந்தோம் மானம்
வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மி னெங்கள்
வாணாள் எம்பெரு மான்தமர்காள்
நின்று காணீர் கண்க
ளார நீரெமைக் கொல்லாதே
குன்று போல ஆடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.5

Summary

O Devotees of the Lord Sri Rama! We concede your victory, we seek no honour. Grant us a new lease of life today, pray do not kill us. Stay and witness to your heart;s content, we dance the Kulamani Durma

பெரிய திருமொழி.926

பாசுர எண்: 1873

பாசுரம்
கல்லின் முந்நீர் மாற்றி
வந்து காவல் கடந்து,இலங்கை
அல்லல் செய்தா னுங்கள்
கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்ல கில்லா தஞ்சி
னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,
கொல்ல வேண்டா ஆடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.6

Summary

Your Lord made a bridge of rocks and crossed over to Lanka, then shattered the bastions and entered the city, engaged us in a battle and routed us. O Son of the Sun Sugrival Look, we have conceded our defeat, Pray do not kill us. We are frightened. we dance the kulamani Duram

பெரிய திருமொழி.927

பாசுர எண்: 1874

பாசுரம்
மாற்ற மாவ தித்த
னையே வம்மின் அரக்கருளீர்
சீற்றம் _ம்மேல் தீர
வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல்பி
றப்பில் அனுமனை வாழ்கவென்று
கூற்ற மன்னார் காண
ஆடீர் குழமணி தூரமே 10.3.7

Summary

O, Those of the Rakshasa clan! come gather. If you want their anger to subside, here is all your need to say, instead of boastful words, call “Glory bel” to Hanuman, the powerful one from birth, and let the death-givers sit and watch you dance the kulamani Duram

பெரிய திருமொழி.928

பாசுர எண்: 1875

பாசுரம்
கவள யானை பாய்புர
வித்தே ரோட ரக்கரெல்லாம்
துவள, வென்ற வென்றி
யாளன் றன்தமர் கொல்லாமே
தவள மாடம் நீட
யோத்தி காவலன் றன்சிறுவன்
குவளை வண்ணன் காண
ஆடீர் குழமணி தூரமே 10.3.8

Summary

The victorious blue-lotus-hued Lord is the price of white-mansioned Ayodhya. His monkey army, overran our Lanka destroying the battle elephants, impetuous horses, tall chariots and our crowned kings. Lest they kill us, dance for them the kulamani Duram

பெரிய திருமொழி.929

பாசுர எண்: 1876

பாசுரம்
ஏடொத் தேந்தும் நீளி
லைவேல் எங்கள் இரவணனார்
ஓடிப் போனார், நாங்கள்
எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள்
கோம னாணை தொடரேன்மின்
கூடி கூடி யாடு
கின்றோம் குழமணி தூரமே 10.3.9

Summary

Our King Ravana wielding a tall spear with a wide blade fled, while we became fired. Pray do not pursue us, we surrender to your king;s command. We gather in hordes and dance the kulamani Duram

பெரிய திருமொழி.930

பாசுர எண்: 1877

பாசுரம்
வென்ற தொல்சீர்த் தென்னி
லங்கை வெஞ்சமத்து அன்றரக்கர்
குன்ற மன்னா ராடி
உய்ந்த குழமணி தூரத்தை
கன்றி நெய்ந்நீர் நின்ற
வேற்கைக் கலிய னொலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும்
மூன்றும் படிநின் றாடுமினே 10.3.10
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Summary

This garland of ten ;kulamani Duram; songs by the greased-spear-wielding kaliy an sing of the surrender-dance of the huge-bodied Rakshnasas in the Victorious battlefield of Lanka in the yore. Devotees! Sing and dance thses songs

Enter a number between 1 and 4000.