பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.931
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1878
பாசுரம்
சந்த மலர்க்குழல் தாழத்
தானுகந் தோடித் தனியே
வந்து,என் முலைத்தடந் தன்னை
வாங்கிநின் வாயில் மடுத்து,
நந்தன் பெறப்பெற்ற நம்பீ.
நானுகந் துண்ணும் அமுதே,
எந்தை பெருமனே. உண்ணாய்
என்னம்மம் சேமமுண் ணாயே 10.4.1
Summary
O Lord born to Nandagopa, my sweet ambrosial My Master! with your beautiful flower-tresses hanging low, come running here alone and take my swollen breasts. Place your auspicious lips on it and take suck! Take suck!
பெரிய திருமொழி.932
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1879
பாசுரம்
வங்க மறிகடல் வண்ணா.
மாமுகி லேயொக்கும் நம்பீ
செங்க ணெடிய திருவே
செங்கம லம்புரை வாயா,
கொங்கை சுரந்திட வுன்னைக்
கூவியும் காணாதி ருந்தேன்
எங்கிருந் தாயர்க ளோடும்
என்விளை யாடுகின் றாயே 10.4.2
Summary
O Dar ocean-hued Lord! O Laden-cloud-hued Lord1 O Lord with auspicious red eyes! O Child with lotus-like lips! My breasts are swelling with milk. I keep calling, but you do not come. I wonder what mischief you are planning with the cowherd-boys!
பெரிய திருமொழி.933
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1880
பாசுரம்
திருவில் பொலிந்த எழிலார்
ஆயர்தம் பிள்ளைக ளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ
செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,
உருகியென் கொங்கையின் தீம்பால்
ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,
மருவிக் குடங்கா லிருந்து
வாய்முலை யுண்ணநீ வாராய் 10.4.3
Summary
O Lord playing in the streets with beautiful cowherd boys! Seeing your naughty pranks. my breasts well with sweet milk, Overflowing come, sit on my lap and take suck with your auspicious lips
பெரிய திருமொழி.934
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1881
பாசுரம்
மக்கள் பெறுதவம் போலும்
வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும்
முதல்வா மதக்களி றன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை
வாங்கிநின் கையில் தருவன்
ஒக்கலை மேலிருந் தம்மம்
உகந்தினி துண்ணநீ வாராய் 10.4.4
Summary
O Master, they very epitome of penance that men and women of the world would undertake to beget a child! O Rutted Elephant, I will give you the crescent-Moon from the sky and your hands! Come to my lap and to suck with sweet pleasure
பெரிய திருமொழி.935
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1882
பாசுரம்
மைத்த கருங்குஞ்சி மைந்தா.
மாமரு தூடு நடந்தாய்,
வித்தக னேவிரை யாதே
வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,
இத்தனை போதன்றி யென்றன்
கொங்கை சுரந்திருக்க கில்லா,
உத்தம னே.அம்மம் உண்ணாய்
உலகளந் தாய்.அம்மம் உண்ணாய் 10.4.5
Summary
O Dark-tressed Lord! You walked between the twin Marudu trees! O Naughty child, forever eating butter! My swollen breasts cannot stand the wait so long. O Pure one, take suck! O Lord who measured the Earth, take suck!
பெரிய திருமொழி.936
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1883
பாசுரம்
பிள்ளய்கள் செய்வன செய்யாய்
பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தி லுடையை
காணவே தீமைகள் செய்தி
உள்ள முருகியென் கொங்கை
ஓட்டந்து பாய்ந்திடு கின்ற
பள்ளிக் குறிப்புச்செய் யாதே
பாலமு துண்ணநீ வாராய் 10.4.6
Summary
You do not behave like a child; you are much stronger than the other children, and full of mischief. You perform such acts right under our gaze. My heart melts for you, my breast overflows with milk. Do not pretend to sleep. Come, take suck! O Strong one, take suck!
பெரிய திருமொழி.937
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1884
பாசுரம்
தன்மக னாகவன் பேய்ச்சி
தான்முலை யுண்ணக் கொடுக்க
வன்மக னாயவள் ஆவி
வாங்கி முலையுண்ட நம்பி
நன்மகள் ஆய்மக ளோடு
நானில மங்கை மணாளா
என்மக னே.அம்ம முண்ணாய்
என்னம்மம் சேமமுண் ணாயே 10.4.7
Summary
When the terrible ogress came disguised as a mother and gave you her beasts. You took her poison milk, and her life with it. O Bridegroom of the good cowherd-dame Nappinnai, and of Dame Earth! My Child, take suck! Auspicious one, take suck!
பெரிய திருமொழி.938
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1885
பாசுரம்
உந்தம் அடிகள் முனிவர்
உன்னைநான் என்கையிற் கோலால்
நொந்திட மோதவுங் கில்லேன்
_ங்கள்தம் ஆநிரை யெல்லாம்
வந்து புகுதரும் போது
வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதங்கு நில்லேல்
ஆழியங் கையனே. வாராய் 10.4.8
Summary
O Lord, wielder of the discus! Your father will get angry; alas, I do not have the heart to beat you with my cane. when your cows return of dusk the gods in the ksy will be watching. Please do not stand there. Come take suck
பெரிய திருமொழி.939
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1886
பாசுரம்
பெற்றத் தலைவனெங் கோமான்
பேரரு ளாளன் மதலாய்,
சுற்றக் குழாத்திளங் கோவே.
தோன்றிய தொல்புக ழாளா,
கற்றினந் தோறும் மறித்துக்
கானம் திரிந்த களிறே
எற்றுக்கென் அம்மமுண் ணாதே
எம்பெரு மானிருந் தாயே 10.4.9
Summary
O Chief among cow-grazens, my Liege! O Son of the benevolent Nandagopai O Crown-prince among the band of relatives! O Lord of eternal fame! O Jewel-elephant roaming through every forest with your cows! O My Master! What took your so long to come and take suck?
பெரிய திருமொழி.940
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1887
பாசுரம்
இம்மை யிடர்க்கெட வேண்டி
ஏந்தெழில் தோள்கலி கன்றி
செம்மைப் பனுவல்_ல் கொண்டு
செங்க ணெடியவன் றன்னை
அம்மமுண் என்றுரைக் கின்ற
பாட லிவையைந்து மைந்தும்
மெய்ம்மை மனத்துவைத் தேத்த
வினவ ராகலு மாமே 10.4.10
கலித்தாழிசை
Summary
This garland of ten songs inviting the red-eyed Lord to come and take suck was sung by strong armed Kalikanri. Those who can sing it with a rue heart will become celestials