Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.941

பாசுர எண்: 1888

பாசுரம்
பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண,
ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கோத வண்ணனே. சப்பாணி
ஒளிமணி வண்ணனே. சப்பாணி (2). 10.5.1

Summary

O Lord dark as the deep ocean! You come and ate butter while the flower-cuoiffured Dame Yasoda sat and churned.  She bound you up and beat you, made yo    u weep, then consoied you, Now you are playing!  Clap Chappani! O Bright gem-hueld Lord! Clap chappani!

பெரிய திருமொழி.942

பாசுர எண்: 1889

பாசுரம்
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்
டேயெம் பிராக்கள் இருநிலத் தெங்கள்தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவ னே. கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.2

Summary

O Beautiful Lord of the Universe, king of the cowherd clan! You always eat up the curds and Ghee of the Maids, making their hearts flutter! O Lord of lotus feet, and lotus lips! Clap chappani! O Dar Lord! Clap chappani!

பெரிய திருமொழி.943

பாசுர எண்: 1890

பாசுரம்
தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்
தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த
தாமோ தரா. கொட்டாய் சப்பாணி
தமரைக் கண்ணனே. சப்பாணி 10. 5.3

Summary

O Damadaral Lord with a leash over your stomachi you overturn the buttermilk pitchers, gobble up the Curds and Ghee, and incur the cowherd-women;s wrath.  “He?, Toddler?”, they say, bind your hands and beat you, clap chappani! O Lotus-eyed Lord1 Clap Chappani!

பெரிய திருமொழி.944

பாசுர எண்: 1891

பாசுரம்
பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து
உற்றா ரொருவரு மின்றி யுலகினில்,
மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட
கற்றாய னே.கொட்டாய் சப்பாணி
கார்வண்ண னே.கொட்டாய் சப்பாணி 10.5.4

Summary

O Lord come to graze calves!  By your birth you freed your parents from shackles, then with no relatives there, you moved into the midst of friends, who feared for you when you sucked the ogress Putana;s poison breast! Clap Chappani! O Cloud-hued Lord! Clap Chappani!

பெரிய திருமொழி.945

பாசுர எண்: 1892

பாசுரம்
சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர,
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றியோ ராயிரம் சப்பாணி
தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி 10.5.5

Summary

O Child who sucked the ogress breast! I beg of you with folded hands, favour me.  The cowherd dames will give you big Appam, Sweet rice bread.  At least for their sake, clap a thousand Chappani! With beautiful hands, Clap Chappanil!

பெரிய திருமொழி.946

பாசுர எண்: 1893

பாசுரம்
கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு
நானவல் அப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,
கோவல னே. கொட்டாய் சப்பாணி
குடமா டீ.கொட்டாய் சப்பாணி. 10.5.6

Summary

O Fighter-Bull of tall-crowned Nandagopa;s clan! O Dark cowherd-Lord! Yours is not an ordinary; stomach! I shall give you flaked rice to go with the Appam for your hunger. Clap Chappani! O pot-dancer! Clap Chappani!

பெரிய திருமொழி.947

பாசுர எண்: 1894

பாசுரம்
புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,
துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை,
அள்ளிய கையா லடியேன் முலைநெருடும்
பிள்ளைப்பி ரான். கொட்டாய் சப்பாணி
பேய்முலை யுண்டானே. சப்பாணி. 10.5.7

Summary

O Child, my Master! You rip the horse;s jaws. you destroy the kurundu trees, then skip and play; reaching out to the hanging rope-self you gobble butter, then fiddle with my breasts with those hands, clap chappani! O Lord who sucked the ogress; breast, Clap Chappani!

பெரிய திருமொழி.948

பாசுர எண்: 1895

பாசுரம்
யாயும் பிறரும் அறியாத யாமத்து,
மாய வலவைப்பெண் வந்து முலைதர,
பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட,
வாயவ னே.கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.8

Summary

In the dead of night, while neither your mother nor friends were watching, a beautiful stranger came and gave you her breast you discovered that she was an ogress, and took her life with your mouthil Clap Chappani O Pleasing one, clap chappani!

பெரிய திருமொழி.949

பாசுர எண்: 1896

பாசுரம்
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை,
மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட,
வள்ளலே. கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.9

Summary

O Benevolent Lord, wonder-child! You smote the bedevilled cart with your feet, then when a woman came to breast-feed you, you grabbed her by stealth and took her life! Clap Chappani!  Adorable Lord! Clap Chappani!

பெரிய திருமொழி.950

பாசுர எண்: 1897

பாசுரம்
காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்,
பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட
சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த்
தாராளா, கொட்டாய் சப்பாணி
தடமார்வா கொட்டாய் சப்பாணி. 10.5.10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Summary

O Lotus-eyed Lord krishna, forever gracing the heart of the benevolent and benign king kalikanri! Clap chappni! O Lord with wide auspicious chest graced by cool Tulasi garlands! Clap chappani!

Enter a number between 1 and 4000.